வாடை முதல் கொண்டல் வரை: காற்றில் இத்தனை வகைகள் உண்டா? தெரிஞ்சுக்கலாமா குட்டீஸ்!

காற்றின் வகைகளை எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்!
Types of winds
காற்றின் வகைகள்Image credit: AI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

பஞ்ச பூதங்களில் ஒன்று வாயு அதாவது காற்று. காற்று  அதன்  தன்மை வேகம் மற்றும் பலம் ஆகியவற்றின் அடிப்படையில்  பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவை என்னென்ன என்று கொஞ்சம் பார்க்கலாம் வாங்க.. 

காற்றின் வகைகள் முக்கியமாக அவை நிரந்தர காற்று,  பருவக்காற்று மற்றும் உள்ளூர் காற்று ஆகும். 

1. நிரந்தர காற்றுகள் / கோள் காற்றுகள் (Planetary Winds):

இவை ஆண்டு முழுவதும் தொடர்ந்து ஒரே திசையில் வீசும். அதாவது வர்த்தக காற்று (Trade winds), கிழக்குக் காற்று (Easterlies) மற்றும் மேலைக் காற்று (Westerlies) போன்றவை நிரந்தர காற்றுகள் ஆகும். பூமியின் சுழற்சி மற்றும் சூரிய வெப்பத்தில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக இக்காற்றுகள் உருவாகின்றன.

2. பருவக்காற்று (Periodic Winds/Monsoon):

ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும், குறிப்பிட்ட திசையில் இருந்து வீசும் காற்றுகள். உதாரணம்  தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று. 

3. உள்ளூர் காற்று / தலக்காற்றுகள் (Local Winds):

குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில், குறிப்பிட்ட நேரத்தில் வீசும்  காற்று. உதாரணம்  வெப்பக் காற்று, குளிர் காற்று. மேலும், கடல் காற்று (கடலில் இருந்து நிலத்தை நோக்கி) மற்றும்  நிலக்காற்று (நிலத்தில் இருந்து கடலை நோக்கி) என்பதும் இதில் அடங்கும். 

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மாயக் குளமும்... வாடாத மலரும்!
Types of winds

4. திசைகள் சார்ந்த காற்றின் வகைகள்:

வாடை: வடக்கில் இருந்து வீசும் காற்று.

தென்றல்: தெற்கில் இருந்து வீசும் காற்று.

கொண்டல்: கிழக்கில் இருந்து வீசும் காற்று.

கச்சான்: மேற்கில் இருந்து வீசும் காற்று.

இனி வெளியில் செல்லும்போது, வீசும் காற்றை உணர்ந்தால், உடனே அது எந்தத் திசையில் இருந்து வருகிறது? அது வாடையா? தென்றலா? அல்லது கொண்டலா? என்று கண்டுபிடித்துப் பார்க்கலாமா குட்டீஸ்..!

logo
Kalki Online
kalkionline.com