ஆப்பிரிக்க சிங்கங்கள் Vs ஆசிய சிங்கங்கள்

African Lions Vs Asiatic Lions
African Lions Vs Asiatic Lions
Published on

*சிங்கங்கள் காடுகளின் ராஜா என்றழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் திறந்த புல்வெளிகள், புதர்கள், பாலைவனங்கள், வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. சிங்கங்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பகுதிகளில் காணப்படும் சிங்கங்கள் வெவ்வேறு தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் ஆசிய சிங்கங்களுக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

*ஆசிய சிங்கம் பாரசீக அல்லது இந்திய சிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆசிய சிங்கம் குறிப்பாக, இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய  பூங்காவில் காணப்படுகிறது. இவை 1,86,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பிரிந்து இந்தியாவை நோக்கி நகர்ந்ததாகவும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் சிங்கங்களின் அழிவிலிருந்து தங்களை தகவமைத்துக் கொண்டதாகவும் நம்பப்படுகிறது. தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படும் சிங்கங்களைக் காட்டிலும், வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்கப் பகுதிகளில் காணப்படும் சிங்கங்களுடன் ஆசிய சிங்கங்கள் நெருங்கிய தொடர்புடைவையாகக் கருதப்படுகின்றன.

*ஆப்பிரிக்க சிங்கங்கள ஆப்பிரிக்கா முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆசியாவில் காணப்படும் சிங்கங்களை விட உருவத்தில் சற்று பெரியவை.

*ஒரு ஆண் ஆப்பிரிக்க சிங்கத்தின் எடை சராசரியாக 150 கிலோகிராம் முதல் 227 கிலோகிராம் வரை இருக்கும்; பெண்களின் சராசரி எடை 156 கிலோகிராம். ஆண் ஆசிய சிங்கங்களின் சராசரி எடை 160 முதல் 190 கிலோ, பெண்களின் எடை 110 முதல் 120 கிலோ வரை இருக்கும்.

*ஆசிய சிங்கங்கள் தலையின் மேற்பகுதியில் குறைவான முடிகளுடன்  காதுகள் வெளியே தெரியும்படியும்  முழங்கால் வரை முடிகள் சற்று அடர்த்தியாகவும்  இருக்குமாறு அதன் தோற்றம் அமைந்திருக்கும். 

ஆப்பிரிக்க சிங்கங்கள் தலையின் மேற்பகுதியில் இருந்து தோள்பட்டை வரை  முடிகளைக்  கொண்டவை. ஆசிய சிங்கங்களை விட  ஆப்பிரிக்க சிங்கங்களின் முழங்கால்களில் குறைந்த அளவு முடிகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சோம்பல் விலங்கின் சில சுவாரஸ்ய உண்மைகள்!
African Lions Vs Asiatic Lions

*ஆசிய சிங்கங்களின் வயிற்றின் கீழ் நீளமான மடிப்பைக் கொண்டுள்ளன. ஆனால், ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு இதுபோன்ற மடிப்பு கிடையாது.

*ஆசிய சிங்கங்கள் சிறிய விலங்குகளை வேட்டையாடுகின்றன, அவற்றின் வாழ்விடத்தின் அளவும், வேட்டையாடும் இடமும் மிகவும் சுருங்கியதானால் கூட இவற்றின் மந்தமான வேட்டையாடுதலுக்கு காரணமாக இருக்கலாம். 

ஆப்பிரிக்க சிங்கம் காட்டெருமைகள், வரிக்குதிரைகள் போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுகிறது. ஆப்பிரிக்க பெண் சிங்கங்கள் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் வேட்டையாடுகின்றன.  அதே நேரத்தில், ஆப்பிரிக்க ஆண் சிங்கங்கள் தங்கள் பிரதேசங்களை பாதுகாப்பதோடு அச்சுறுத்தல்களை எதிர்த்தும் போராடுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com