சிறுவர் சிறுகதை - மோர்சாதம்

Students eating food
Students eating food
Published on

பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்காக எப்போதும் ராதிகா கொண்டுவருவது மோர்சாதம்தான்! தோழிகளில் சிலர் வகைவகையான உணவுகளைக் கொண்டு வருவார்கள். 

அவர்களில் ஒருத்தி, அந்த வருடம்தான் இந்தப் பள்ளியில் வந்து சேர்ந்த ருக்மிணி. தந்தையாரின் வேலை இடமாற்றம் காரணமாக இந்தப் பகுதியில் குடியேறியிருந்தாள். மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் என்பது அவள் கொண்டுவரும் உணவுகளிலிருந்தே தெரியும். எந்தவகை உணவாக இருந்தாலும், அதில் முந்திரிப் பருப்புகள் நெய் பூசிக்கொண்டு மினுமினுக்கும். அவள் டிபன் பாக்ஸைத் திறந்தாலே கும்மென்ற மணம், பக்கத்திலுள்ள எல்லோருடைய பசியையும் அதிகரிக்கச் செய்யும்.

ருக்மிணி கர்வத்துடன் எல்லோரையும் பார்ப்பாள். அவள் பகிர்ந்தளிக்கும் உணவுகளை சுவைக்கும் தோழிகள் தன்னை வாயாரப் பாராட்டும்போது, ராதிகா மட்டும் வெறும் புன்முறுவலுடன் பழகுவது ருக்மிணிக்கு கௌரவக் குறைச்சலாகவே இருந்தது. ஆகவே அவளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கேலி செய்யத் தயங்கியதேயில்லை. 

‘‘ஏன் ராதிகா, எங்களுக்கெல்லாம் பங்கு கொடுக்க வேண்டியிருக்குமேன்னுதான் மோர்சாதமாகக் கொண்டு வரியா?‘‘ என்று கேட்டு சீண்டுவாள். ‘‘நாங்க ஏன் உனக்கு எங்க வீட்டு டிபனைத் தரோம் தெரியுமா? நாங்க சாப்பிடறதைப் பார்த்து நீ கண் வெச்சிடக்கூடாதுன்னுதான்,’’ என்றும் சொல்லி நோகடிப்பாள். 

அநேகமாக தினமும் ராதிகாவை ருக்மிணியும், பிறரும் கேலி செய்வது நிற்காது. ஆனால், அதற்காக அவர்களுடன் கோபித்துக் கொண்டு அவள் தனியாகவோ, வேறு தோழிகளுடனோ சாப்பிடப் போவதில்லை. ‘எவ்வளவு நாளைக்குதான் கேலி பண்ணுவார்கள், பண்ணட்டுமே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: நிலவை அழைத்த குழந்தை இராமன்!
Students eating food

எத்தனையோ உத்திகளைக் கடைபிடித்தும், ராதிகா சிறிதும் அசராததைக் கண்டு ஒருநாள், ‘‘ஏன் ராதிகா, தினமும் மோர்சாதம் மட்டும் கொண்டுவரும் நீ, நாங்க சாபிடறா மாதிரி விதவிதமான உணவு வகைகளை ருசி பார்க்கணும்னு ஆசை இருக்காதா? உன் அம்மாவிடம் கேட்க மாட்டாயா?’’ என்று கேட்டாள் ருக்மிணி.

‘‘எங்க வீட்ல வசதி இல்லை ருக்மிணி. என் அப்பா வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் விபத்து ஏற்பட்டு அவருக்குக் கால் ஊனமாகிவிட்டது. ஆனாலும் அந்த நிறுவனத்தில் அவரை வீட்டுக்கு அனுப்பிடாம, குறைஞ்ச சம்பளத்தில், எளிமையான வேலையைக் கொடுத்து ஆதரிச்சு வர்ராங்க. அதனால எல்லாத்திலேயும் சிக்கனம் பார்க்கவேண்டிய கட்டாயம். வசதியாக இருந்தபோது என் அம்மாவும் வகைவகையாக டிபன் செய்துதான் தருவாங்க. ஆனா, அதையே இப்பவும் எதிர்பார்க்க முடியுமா? இப்போதைக்கு எது முடியுமோ அதை ஏற்றுக்கொள்றதுதானே சரி?’’ என்று அமைதியாக பதில் சொன்னாள் ராதிகா. ஆனால் ருக்மிணி சமாதானமடையவில்லை.

ம்மா, அப்பா இருவர் முகமும் வாட்டமுற்றிருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள் ருக்மிணி. ‘‘என்னாச்சு?’’ என்று தவிப்புடன் கேட்டாள்.

‘‘ருக்மிணி, எங்க ரெண்டுபேருக்குமே ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறதாம்; கொலஸ்ட்ராலும் கூடி இருக்கிறது. அதனால உணவு விஷயத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்,’’ என்று பதிலளித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
உலக சிறுவர் கதைகள்: 4 - நிழல் பாவைக் கூத்து உருவான கதை! (சீனச் சிறுவர் கதை)
Students eating food

"ஏம்ப்பா, அதுக்குதான் நிறைய மருந்தும், சிகிச்சையும் இருக்கே!" என்று வாதாடினாள் ருக்மிணி.

"இருக்குதான். ஆனா மருந்து ஓரளவுக்குதான் வேலை செய்யும். அதற்கு ஏதுவாக நாம உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டோம்னா குறைகள் நீங்கும்," என்றார் அப்பா.

"அதனால நான் இனிமே எளிமையான சமையலைத்தான் தயாரிக்கணும். உனக்குதான் பாவம், ருசிருசியாக சாப்பிட்டுப் பழகிடுச்சு…‘‘ என்று வருத்தப்பட்டாள் அம்மா.

"குழந்தையை ஏன் ஏங்க வைக்கிறே?" அப்பா அம்மாவைக் கடிந்துகொண்டார். "நாம பத்தியமாக சாப்பிட்டுக்கலாம்; இவளுக்குத் தனியாக வேறு சமையல் செய்."

அப்பாவின் அன்பு ருக்மிணியை நெகிழ வைத்தது. "வேண்டாம்மா; நீங்களும் வேலைக்குப் போறீங்க. இரண்டு வகையாக சமைக்கறது தினப்படி முடியாது. நானும் பத்திய சாப்பாட்டையே சாப்பிட்டுக்கறேன். இப்போதிலிருந்தே இப்படி சாப்பிட்டு பழகிட்டா ஒருவேளை உங்க வயசிலே நான் எந்த உபாதையும் இல்லாமல் இருக்க முடியுமோ என்னவோ!" என்றாள் உறுதியுடன்.

ஏற்கெனவே சாப்பிட்டுப் பழகிய டாம்பீகமாக உணவுகளை ராதிகா இப்போது மறுக்கிறாள் என்றால் அவளுடைய மனோதிடம்தான் எவ்வளவு உயர்ந்தது என்று தனக்குள் வியந்தாள் ருக்மிணி. ‘அவளைத்தான் எப்படியெல்லாம் மனம் நோக வைத்தேன்! அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவள் கொண்டுவரும் மோர்சாதத்தில் கொஞ்சம் பங்கு கேட்கவேண்டும்,’ என்றும் நினைத்துக் கொண்டாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com