
நாட்டிலேயே மிகச் சிறந்த அறிஞர்கள் கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்தனர்.
இதனால் அவருக்கு கர்வம் நிறையவே உண்டு.
ஒரு நாள் அரசவைக்கு ஒரு சிற்பி மூன்று சிலைகளுடன் வந்தார்.
அவர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் அரசவையில்தான் சிறந்த அறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுகிறீர்கள். இதோ நான் மூன்று சிலைகள் கொண்டு வந்துள்ளேன். இதில் சிறந்த சிலை எது என்று காரணத்துடன் சொல்ல வேண்டும். சொன்னால் அந்த அறிஞருக்கும் உங்களுக்கும் நான் அடிமை. அப்படி யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை எனில் அந்த அறிஞர் எனக்கு அடிமை. அத்துடன் இனிமேல் அறிஞர் நிறைந்த சபை என்ற கர்வத்தை நீங்கள் விட்டு விட வேண்டும்,” என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.
சிலர் கோபத்துடன் அந்த சிற்பி மீது பாய்ந்தனர்.
ஆனால் கிருஷ்ணதேவராயரோ அவர்களைத் தடுத்தார்.
“கேவலம் மூன்று சிலைகளைக் கொண்டு வந்துள்ளார் இந்தச் சிற்பி. இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என்ன? இந்தக் கேள்வியை ஏற்றுக் கொண்டு நல்ல விடையைத் தருவோம்” என்றார் மன்னர்.