வால் நட்சத்திரம் ஆச்சரியமான தகவல்கள். வாங்க சுட்டீஸ் தெரிஞ்சிக்கலாம்!

Comet Surprising Information
CometImage credit - tamil.webdunia.com
Published on

ங்கள் பகுதியில் சிறுவர்கள் குறும்பு செய்தால் அவர்களை “சரியான வால் நட்சத்திரம்” என்று கூறுவார்கள். எங்க காலத்திலே எங்க அம்மாக்கள் நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவாங்க. இப்ப அதெல்லாம் இல்லை. சரி. வாங்க. நாம இந்த பதிவில் வால் நட்சத்திரங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.

வால் நட்சத்திரம் Comet என்று அழைக்கப்படுகிறது. காமெட்டா (Cometa) என்ற கிரேக்க வார்த்தைக்கு முடி என்று பொருள். வால் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமானவை. இவை வாலுடன் காணப்படுவதால் வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகின்றன. சாதாரண நட்சத்திரத்திற்கும் வால் நட்சத்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

வால் நட்சத்திரத்திற்கு தலை வால் என்ற இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன. வால் நட்சத்திரத்தின் கனமான தலைப்பகுதி நியூக்ளியஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நியூக்ளியஸைச் சுற்றி பனிப்பாறைகளாலும் ஒருவித தூசுகளாலும் ஆன கலவை காணப்படுகிறது. இது காமா என்று அழைக்கப்படுகிறது.

வால் நட்சத்திரங்கள் வெவ்வேறு கால அளவுகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை சூரியனை ஒரு முறை சுற்றிவர 33 வருடங்கள் முதல் 2000 வருடங்கள் வரை ஆகின்றன. இந்த கால அளவு வால்நட்சத்திரத்திற்கு ஏற்றாற் போல மாறுபடும்.

நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரம் சூரியனின் அருகில் கடக்க நேரிடும்போது சூரிய வெப்பத்தால் வால் நட்சத்திரத்தின் பனிப்பாறைகள் உருகுவதால் வால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது. வால்நட்சத்திரத்தின் வாலின் நீளம் ஐம்பது லட்சம் மைல்கள் முதல் இருபது கோடி மைல்கள் வரை நீண்டு காணப்படும்.

பிரபஞ்சத்தில் ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. சில வால் நட்சத்திரங்களை நம்மால் வெறும் கண்களாலேயே காண முடியும். வேறு சில ஒளி குறைந்த வால் நட்சத்திரங்களை நாம் தொலைநோக்கி மூலமே காண முடியும். வால் நட்சத்திரங்கள் பாறைகள் தூசுகள் துகள்கள் மற்றும் வாயுக்களால் ஆனவை. இவற்றின் வால் பகுதியில் அமோனியா, மீதேன், நீராவி, பனித்துகள்கள் ஆகியவை காணப்படுகின்றன. சில வால் நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வருகின்றன.

வால்நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க அதன் தலைப்பகுதி பெரிதாகிக் கொண்டே வரும். வாலும் நீண்டு கொண்டே போகும். வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்புறத்திலேயே அமைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
மெல்ல நட மெல்ல நட... நத்தைகளைப் பற்றிய வியப்பான தகவல்கள்!
Comet Surprising Information

நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் அமைந்துள்ள பெரிஹீலியன் பாதையை கடக்க நேரிடும் போதெல்லாம் சூரிய வெப்பத்தால் வால் நட்சத்திரத்தின் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உருகும் நியூக்ளியஸ், வால் பகுதிகள் மீண்டும் உருவாக முடியாத காரணத்தினால் வால் நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து இறுதியில் மறைந்து போகும்.

வானியல் விஞ்ஞானிகள் தொலைநோக்கிகளின் மூலம் வால் நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கிறார்கள். இவ்வாறு ஆண்டு தோறும் புதுப்புது வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்த வால் நட்சத்திரமானது கி.பி.1682 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் எட்மண்ட் ஹேலி என்பவர் கண்டுபிடித்து அறிவித்தார். இதன் காரணமாகவே இந்த வால் நட்சத்திரத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வருகிறது.

தற்போது வரை விஞ்ஞானிகள் ஆயிரத்திற்கும் அதிகமான பெரிய வால்நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளார்கள். வால் பகுதியானது நுணுக்கமான துகள்களால் ஆனதாக உள்ளதால் இவை பூமியின் மீது மோதினாலும் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

எப்பவாவது இரவு நேரங்களிலே வானத்தைப் பார்த்திருக்கீங்களா சுட்டீஸ். இல்லைன்னா ஒரு நாள் பாருங்க. விண்வெளி பல ஆச்சரியங்கள் நிறைந்த அற்புதமான ஒரு உலகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com