
கரப்பான் பூச்சி:
இதற்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று தலையிலும் மற்றொன்று Abdomen பகுதியிலும் உள்ளன. இந்த இரு மூளைகளால் அவை வேகமாக ஓடுகின்றன. அளவு மனித மூளையில் பத்தில் ஒரு பங்கு மூளையை இது கொண்டிருந்தாலும், அதில் உள்ள Synapses என்ற மூலக்கூறு மூளையை மிக ஆக்டிவாக வைக்கிறது.
Bumblebee:
இதற்கு மூன்று மூளைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் பாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஒன்று இறக்கைகளையும், ஒன்று கொடுக்கையும் இன்னொன்று ஆன்டென்னாவையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூளைகள் அளவு சிறியதாக இருந்தாலும் பூக்களை நன்றாக ஞாபகம் வைக்க முடியும்
Slugs:
இதற்கு மூன்று மூளைகள் உள்ளன. அவைகள் Buccal, Cerebral, Pleural என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்ட, சுவாசிக்க மற்றும் மூச்சு விடுதல் போன்றவற்றிற்கு உதவுகின்றன. இதன் மூளை மனித மூளை போன்றே செயல்படுவதாக ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது. இவைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாம்.
நத்தை:
நத்தைக்கு மூன்று மூளைகள் உள்ளன. சிலவகை நத்தைகளில் ஆறு மூளைகள் கூட காணப்படுகின்றன.
Squids:
இதற்கு மூன்று மூளைகள் உள்ளன. ஒரு மூளை உடலையும் மற்ற இரு மூளைகள் கண்களையும் கட்டுப்படுத்துகின்றன. இதன் மூளை டோநட் (Donut) வடிவில் இருக்கும். இதன் மூளைகள் சிறிய அளவிலேயே உள்ளன. இதனுடைய மூளையின் 80 சதவீதம் பார்வைக்கு விஷயங்களை அனுப்புவதில் குறியாக இருக்கின்றன.
கொசு:
இதற்கு மூன்று மூளைகள் உள்ளன. ஒன்று தலையிலும் இன்னொன்று இறக்கையிலும் மற்றொன்று Abdomen பகுதியிலும் உள்ளன. இது மனித வாசனையை எளிதாக கண்டுபிடித்துவிடும். இதன் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதாக அறியப்பட்டிருக்கிறது.
Octopus:
எட்டு கைகள் உள்ள இதற்கு ஒன்பது மூளைகள் உள்ளன. மிக முக்கியமானது தலைப் பகுதியில் உள்ளது. இதன் எட்டு கைகளிலும் மூளைகள் உள்ளன. ஒவ்வொரு கையும் தனியாக சுதந்திரமாக இயங்கும் வகையில் உள்ளன. இதன் மூளையில் 500 மில்லியனுக்கு மேல் ந்யூரான்கள் உள்ளன.
பட்டுப்புழு:
பட்டுப்புழுவில் 11 மூளை Lobes உள்ளன. சிறிய அளவில் மூளை இருந்தாலும் இவைகளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.
அட்டைப் பூச்சி:
இது 32 அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் மூளை உள்ளன. 32 மூளைகளில் 500 ந்யூரான்கள் உள்ளன. இதன் மூளைகள் இவைகளின் ஆயூளை அதிகரிக்கவும் மற்றும் முடிவுகள் எடுப்பதில் உதவுவதாகவும் அறியப்படுகிறது.