ஊர்ந்து செல்லும் கடல் முயல்கள்! ஆனால், இவை முயல்கள் அல்ல!

sea hares
sea hares
Published on

கடல் முயல்கள் ஒரு ஓடு கொண்ட காஸ்ட்ரோபோடா வர்க்கத்தை சார்ந்தவை. இது ஒரு மென்மையான ஓடுடைய மொல்லஸ்க் (நத்தைகள் போன்ற) இனமாகும். உயிரினத்தின் உடல் பகுதி முழுவதிலும் புரதத்தினால் ஆன ஓடு உள்ளது.

தாவரங்களை மட்டுமே விரும்பி உண்ணும். இதற்கு  தலையின் முன்புறத்தில் இரு உணர்வு கொம்புகள் உள்ளன. அதனால், இது பார்ப்பதற்கு முயலை போன்று இருப்பதால் கடல் முயல் என்கிறார்கள். இது அதிக நச்சு தன்மை கொண்ட விலங்கு. 

இது பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் கலி போர்னியா கடற்கரையிலும், மற்றும் மெக்ஸிகோவிலும் காணப்படுகிறது. 

இந்த முயலின் இளம் உயிரி ஆனது உடல் முழு வதையும் மண்ணுக்குள் மறைத்துக் கொண்டு உணர்வு கொம்புகளை மட்டும் நீருக்கு வெளியில் நீட்டி கொண்டிருக்கும். 

கடற்பாசிகள் இவற்றின் முக்கிய உணவாகும். கடற் பாசிகளின் மீது ஊர்ந்து செல்லும் போது எதிரிகள் தாக்க நினைத்தால் கடற் பாசிக்குள் சென்று மறைந்து விடும். 

இயற்கை போன்ற வடிவத்தில் தோலில் காணப்படும் மடிப்புகளின் உதவியுடன் தான் ஊர்ந்து செல்கின்றன. தனது உடலை சுருக்கி பின் மீண்டும் விரிவடைந்து கொண்டே செல்வதால் இதனால் குறைந்த தூரம் மட்டுமே நீந்த முடிகிறது.

இவை நூல் போன்ற அமைப்பில் முட்டை இடும். இந்த முயல் முட்டை இட்ட சிறிது நேரத்திலேயே இறந்து விடும். 

இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்க கடற் பாசிகளின் நிறத்தைப் போலவே தனது நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொள்வதால் இதன் எதிரிகளால் இவற்றை அடையாளம் காண முடிவதில்லை. 

கடல் முயல்கள் கிரிப்சிஸ் (Crypsis) போன்ற சுவாரஸ்யமான பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
தேசிய மரமாக ஏன் ஆலமரம் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியுமா?
sea hares

கடல் முயலுக்கு இரண்டு வகையான சுரப்பிகள் உள்ளன. ஒன்று மை போன்ற ஊதா - சிவப்பு திரவத்தை சுரக்கக் கூடியது. எதிரிகள் தாக்க முற்படும் போது அவற்றிடமிருந்து தப்பித்து கொள்ள இந்த மை போன்ற திரவத்தை, 'காவல் துறையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைப்பதை போல்' கக்குகின்றன. அந்த நேரத்தில் எதிரிகளால் சிறிது நேரம் எதையும் காண முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் அங்கிருந்து தப்பித்து விடும். 

மற்றொன்று ஓபலின் சுரப்பிஇது பால் வெள்ளை நிறத்தில் பொருளை சுரக்கும். இது மிகவும் விரும்ப தகாத துர் நாற்றம் உடையது. 

இதன் தோல் விஷத்தன்மை உடையதாக இருப்பதாலும் மற்ற விலங்குகள் இதை சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றன.

இவை வெளிக்கொட்டும் மையில் இருந்து மருந்துகள் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடமிருந்து வீசும் துர்நாற்றத்தினாலும், தோலில் உள்ள விஷத்தினாலும் மக்கள் இதனை உணவாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் கடல் முயல் என்பது சீனாவில் ஒரு பிரபலமான சுவையான உணவு பொருளாகும். இது பொதுவாக காரமான சாஸில் வறுத்து பரிமாறப் படுகிறது. 

கடல் முயல் ஆனது கடல் அட்டை உயிரினங்களைப் போலவே கடலின் தரைப் பகுதியை தூய்மை படுத்தும் உன்னதமான பணியை செய்து கொண்டிருக்கின்றன. இதனால் இவை கடலில் சுற்றுப் புறச்சூழலைப் பேணி காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com