தேசிய மரமாக ஏன் ஆலமரம் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியுமா?

ஆலமரம்...
ஆலமரம்...
Published on

மிகுந்த பாரம்பரிய மிக்கதாகவும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததுமானதாக போற்றப்பட்டவையே நம் தேசியச்  சின்னங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆலமரம் என்பது ஒற்றுமையை விளக்குவது. மேலும் ஆலமரம் மிகுந்த பாரம்பரியமிக்கதும் கூட. அதனால்தான் பெரியோர்கள் வாழ்த்தும்போது கூட "ஆல்  போல் தழைத்து" என வாழ்த்துவார்கள்.

எந்த ஒரு தாவரத்திற்கும் பெரும்பாலும் ஆணிவேரே மையமாக இருக்கும். ஆனால் ஆலமரத்திற்கு மட்டும் அப்படி அல்ல, அதன் விழுதுகள் தரையில் ஊன்ற ஊன்ற ஒவ்வொன்றும் தானே உயிர் பெற்று வளர ஆரம்பிக்கும். அதனால்தான் ஒரே மரம் அதிக அளவிலான பரப்பில் படர்ந்து வளர முடிகிறது.

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

ஆலமரத்தின் மையமாக  இருக்கக்கூடிய மரம் சாய்ந்தாலும் கூட, அதன் விழுதுகள் மண்ணில் வேரூன்றி வளரும் தன்மை உடையவை.

வந்தோரை வாழவைக்கும் வள்ளல் என்பதற்கேற்ப அனைத்து உயிர்களுக்கும் இடம் கொடுக்கக்கூடிய மரங்களில் முதலிடத்தை பெறுவது ஆலமரமே.

அது மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய ஆலமரம் இந்தியாவில் தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
ஆலமரம்...

கொல்கத்தா அருகில் உள்ள ஹொவ்ரா எனும் இடத்திலுள்ள ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள ஆல மரமே உலகின் மிகப்பெரிய ஆலமரம் ஆகும்.

இந்த ஆலமரமானது சுமார் 4 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. சுமார் 3,300 விழுதுகள் இந்த ஆலமரத்தில் உள்ளன.

இந்த ஆலமரத்தை பற்றிய குறிப்புகள் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

இவ்வளவு சிறப்புகளை பெற்றிருப்பதால்தான் ஆலமரம் நம் தேசிய சின்னமாக போற்றப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com