'நள்ளிரவு சூரியன்' மற்றும் 'துருவ இரவு' பற்றி அறிவோமா?

Midnight Sun
Midnight Sun

பகல் மற்றும் இரவு இரண்டும் மாறி மாறி வருவதால் தான் இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பல நல்ல மாற்றங்களை கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஆனால் அதே பகலும் இரவும் தான், நம் உலகில் சில பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மாறாமலும் இருக்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்     

அடிப்படைகள்:

நமது கிரகமான பூமி, அதன் அச்சில்(Earth  axis) சுழலும் போது, ​​உலகின் பல்வேறு பகுதிகள் சூரியனை எதிர்கொள்கின்றன அல்லது அதிலிருந்து விலகிச் செல்கின்றன, இதன் விளைவாக தான் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. இந்த சுழற்சி தோராயமாக 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும், இதை தான் நாம் ‘ஒரு நாள்’ என்று குறிப்பிடுகிறோம்.

சாய்ந்த அச்சு (Tilted Axis):

பூமியின் அச்சு சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும்போது சற்று சாய்ந்துள்ளது. இந்த சாய்வானது தான் மாறிவரும் பருவங்களுக்கும், ஆண்டு முழுவதும் நாம் எதிர்கொள்ளும் பகல் மற்றும் இருளின் மாறுபாட்டிற்கும்  காரணமாகும். பூமி சூரியனைச் சுற்றி வரும் தருணத்தில் , சூரிய ஒளி வெவ்வேறு கோணங்களில்  அட்சரேகைகளின் (Latitudes) மேல் விழுகிறது. இதன் தாக்கம்  நம் பூமியின் சில பகுதிகள் நீண்ட நாட்கள் கோடையிலும் மற்றும் குறுகிய நாட்களை குளிர்காலத்தில் அனுபவிக்க வழிவகை செய்கிறது.

பூமத்திய ரேகை மற்றும் துருவங்கள் (The Equator and the Poles):

 நம் பூமியின் பக்கவாட்டில் உள்ள பூமத்திய ரேகையில், ஆண்டு முழுவதும் பகலும் இரவும் தோராயமாக சமமாக இருக்கும். இருப்பினும், நாம் பூமியின் நடு உச்சியான துருவங்களை நோக்கி நகரும்போது, இந்த ​​​​சூழ்நிலை சற்று வேறு விதமாக மாறும்.

நள்ளிரவு சூரியன் (The Midnight Sun):

ஆர்க்டிக் வட்டத்திற்கு (Arctic circle) மேலே (66.5° வடக்கு அட்சரேகையில்), ‘நள்ளிரவு சூரியன்’ என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு நடக்கும். கோடை மாதங்களில் (பொதுவாக மே பிற்பகுதியிலிருந்து ஜூலை இறுதி வரை), இந்த வட்டத்தில் உள்ள இடங்கள் தொடர்ச்சியான பகல் நேரத்தை அனுபவிக்கின்றன. சூரியன் ஒருபோதும் மறையாத ஒரு இடத்தை கற்பனை செய்து பாருங்கள். மொத்த நிலப்பரப்பும்  24/7 தங்க நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் உள்ள ‘Inuvik’ என்ற நகரத்தில்  இந்த நள்ளிரவு சூரியனை நம்மால் நாள்கணக்கில் கண்டு ரசிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
விண்வெளி ஆராய்ச்சியில் அன்றைய மைல்கல் - இன்றும் தொடர்பில் இருக்கும் அதிசயம்!
Midnight Sun

துருவ இரவு (The Polar Night) சீதோஷ்ண நிலை:

மாறாக, குளிர்கால மாதங்களில் (நவம்பர் பிற்பகுதியிலிருந்து ஜனவரி பிற்பகுதி வரை), இதே பகுதிகள் இருளில் மூழ்கும். இந்த காலம் ‘துருவ இரவு’ என்று அழைக்கப்படுகிறது. மக்கள் சூரியனைப் பார்க்காமல் வாரங்கள் அல்லது மாதங்கள் கூட சகித்துக்கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்ல செயற்கை ஒளியை நம்பி இருப்பார்கள்.

ஆர்க்டிக் வட்டத்திற்கு அப்பால்:

ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் சில பகுதிகளில் கோடை காலங்களில் ‘நள்ளிரவு சூரியனின்’ சிறு தாக்கத்தால் பகல் நேரங்கள் நீடிக்கப்படுகின்றன.  

சாம்பல் கோடு மற்றும் அந்தி மண்டலம் (The Grey Line and the Twilight Zone):

பூமியில் இரவும் பகலும் என்று இரு பகுதிகளையும் பிரிக்கும் கோடு தான் ‘டெர்மினேட்டர் லைன்’ என்பார்கள். இதை ‘சாம்பல் கோடு(The Grey Line)’ என்றும் அழைப்பார்கள். காரணம் பூமியின்  வளிமண்டலத்தை தாண்டி ‘டெர்மினேட்டர் லைன்’ வழியாக  சூரிய ஒளி உள்ளே வரும் போது ஒளியையும் இருளையும் சேர்த்து ஒரு மங்கலான நிறத்தை(Twilight Zone) வானத்தில் ஏற்படுத்துகிறது. இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை தரும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com