விண்வெளி ஆராய்ச்சியில் அன்றைய மைல்கல் - இன்றும் தொடர்பில் இருக்கும் அதிசயம்!

Voyager
VoyagerImg Credit: Nasa

பொதுவாக மனிதன் விண்வெளிக்கு அனுப்பிய சாதனங்கள் அனைத்தும் நம் சூரிய குடும்பத்திற்குள்ளேயே சுற்றி வருவது போல் தான் அமைத்திருக்கும். ஆனால் அந்த விதியை இரண்டு விண்வெளி ஆய்வு கருவிகள் (space probes) மாற்றி காட்டியுள்ளன. அதை பற்றி தான் நாம் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

வாயேஜர் 1 மற்றும் 2

1977 ஆம் ஆண்டு வாயேஜர்( voyager ) என்று பெயர் வைத்த இரண்டு விண்வெளி கருவிகள் நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இதில் voyager 2 தான் முதலில் விண்வெளி சென்றது. அதன் பின் தான் voyager 1 அனுப்பப்பட்டது. இவை அனுப்பப்பட்டதன் நோக்கமே பூமியை தாண்டி உயிர்கள் வாழ கூடிய கிரகங்கள் இருக்கின்றனவா என்பதை தெரிஞ்சுக்க தான்.

அதுக்காக விஞ்ஞானிகள் ஒரு புதுவித முயற்சியை மேற்கொண்டனர். அதாவது அந்த கருவியில் தங்கமுலாம் பூசப்பட்ட (ஒலியை மட்டுமே எழுப்பும்) கேசட்டை வைத்தனர். அதில் “பூமியில் மனிதனால் பேசப்படும் பல மொழிகள்( தமிழை தவிர ) மற்றும் பூமியில் கேட்கப்படும் வெவ்வேறு ஓசைகள் மற்றும் விலங்குகளின் ஓசைகள் என அனைத்தையும் அந்த கேசட்டில் பதிவேற்றம் செய்து இருந்தனர்.

நம் பூமிக்கு எப்படி வரலாம் என்ற வரைபடத்தையும் அந்த கேசட்டில் வரைந்து வைத்திருந்தனர். ஏன் எவ்வாறு செய்தனர்? மனிதர்கள் போலவே பரிணாம வளர்ச்சியடைந்த வேற்றுகிரக வாசிகள் இருந்தால் அவர்களிடம் தொடர்பு கொள்லாமே என்ற நோக்கத்துடன் தான் இதை செய்தனர்.

நம் விஞ்ஞானிகள் திட்டம்போட்டது என்னவோ நம் பூமியை தாண்டி இருக்கும் 5 கிரகங்களை பற்றி அறியவே. ஆனால் அவர்கள் நினைத்ததையும் தாண்டி இந்த கருவிகள் நன்றாக செயல்பட்டதால், முதலில் voyager 1 னை நம் சூரிய குடும்பத்திற்கு அப்பால் செல்ல வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
பிரம்மாண்டத்தில் பிரமாண்டம் - தொடரும் விண்வெளி ஆராய்ச்சி!
Voyager

பின் voyager 2 வையும் இன்னொரு திசையில் அனுப்பி வைத்தனர். அதற்கு ஆதாரமாக voyager 1 ஆல் எடுக்கப்பட்ட நம் சூரியகுடும்பத்தின் முழு குழு படத்தை வெளியிட்டனர். இது அன்றைக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Voyager 1 இன்று வரை தொடர்பில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

காரணம் மின்சார தேவையை கருத்தில் கொண்டு voyager 1 இல் தகவல் தரும் தொடர்பை தவிர மற்ற அனைத்து மின் உபகரணங்களையும் ஆப் செய்து விட்டனர். இதனால் தங்குதடையின்றி Voyager 1 தகவல் தொடர்பில் இருக்கிறது.

இப்பொழுது voyager 1 நம் பூமியில் இருந்து சுமார் 24.4 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. ஆனால் இன்னும் அது நம் சூரிய குடும்பத்தை முற்றிலும் தாண்டவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது இருக்கும் மின்சாரத்தை வைத்து voyager 1 நம் பூமியுடன் 2025 வரை தொடர்பில் இருக்கலாம் என யூகிக்கின்றனர்.

“ஏதோ ஒரு நாள் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேற்றுகிரகவாசிகளிடம் அந்த கருவி சிக்கி அவர்கள் நம்மை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com