காகங்களின் இந்த 3 வகைகள் பற்றித் தெரியுமா?

செம்பழுப்புவால் காகம்
செம்பழுப்புவால் காகம்

செம்பழுப்புவால் காகம்

காகம் என்றாலே நினைவில் வருவது கறுப்பு கலர்தான். ஆனால், இந்தக் காகம் செம்பழுப்பு நிறம் கொண்டது. சாதா காகத்தைப்போலவே இதுவும் அனைத்துண்ணி. இதன் விலங்கியல் பெயர்     ‘டென்றொசிட்டா வேக பண்டா’ என்பதாகும். இதன் பொருள் ‘மரங்கள் இடையே அலைபவர்’ என்பதாகும்.

உருவத்தில் காகத்தின் அளவைக்கொண்டிருக்கும். நிறம், வால் மற்றும் கூவும் சத்தம் ஆகியவை காகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அலகும், தலையும் காகத்தை ஒத்திருக்கும். உடலின் மேல் பகுதி செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இது அரிகாடை, முக்குறுணி, மாம்பழத்தான், கொய்யா பழத்தான் குருவி என்ற பெயர்களாலும் அறியப்படும். இதனை அடையாளம் காண உதவுவது இதன் நீளமான வால். இது இறக்கைகளை முதலில் விரைவாக அடித்து, அதனைத் தொடர்ந்து இறக்கைகளையும் வாலையும், விரித்த வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பறந்து செல்லும்.

மரங்கள் அடர்ந்த கிராமச் சூழலிலும், நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களிலும் சத்தமிட்டுக்கொண்டே இணையாகவோ, குடும்பமாகவோ காணப்படும். தங்களது எல்லைக்குள் மற்ற பறவைகளை வரவிடாமல் ஒலி எழுப்பி சண்டை இடும்.

செம்பழுப்புவால் காகம் விரும்பி உண்பது பழங்கள், பூச்சி, பல்லி, தவளை, பூரான், பிற பறவைகளின் முட்டைகள் ஆகும். இந்த காகம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கூடு கட்டும். காக்கையைப் போன்றே கூடு கட்டும். 4 முதல் 5 முட்டைகள் இடும். குஞ்சு பொரிக்கும் தருணங்களில் நெருங்குபவரின் தலையைச் சுற்றி சுற்றி வந்து தாக்க வரும்.

இவற்றின் குரல் குறுகிய ’ர ர ர’ என்று கரகரப்பாகவும், சத்தமாக, வேகமாக ‘கோ. கீ. லா’ என்பது போலும் ஒலி எழுப்பும்.

குழந்தைகளே! உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ‘கோ.கி.லா’ என்ற ஒலி கேட்டால், மரக்கிளைகளில் செம்பழுப்புவால் காகம் வந்திருக்கும் போய்ப் பாருங்கள்.

மீன் பிடிக்க உதவும் சாதா நீர்க் காகம்

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் நீர்க் காகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நீர்க் காகத்தின் அடித்தொண்டைக்கு அருகே ஒரு சுருக்கு கட்டப்படுகிறது. இதனால் காகத்திற்கு சிறிய மீனை மட்டுமே விழுங்க முடிகிறது. நீர்க்காகம் ஒரு பெரிய மீனை விழுங்க முயற்சிக்கும்போது மீனானது பறவையின் தொண்டைக்குள் சிக்கிக்கொள்கிறது. பறவை மீனவரின் படகுக்கு திரும்பும்போது மீனவர் நீர்க் காகத்தின் தொண்டையில் இருந்து சுருக்கை அகற்றுவர்.

நீர்க் காகம்
நீர்க் காகம்

ஆனால், தற்போது மீன்பிடி தொழிலுக்கு நீர்க் காகங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் மீன் பிடிக்கக்கூடிய தொழில்நுட்பம் மேம்பட்டு, திறமையான முறைகள் இன்று இருக்கின்றன. மேலும், விலங்குகளும் பறவைகளும் இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது சரியல்ல என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சுற்றுலாவில் உதவும் காப்பீடு திட்டம்: தெரியுமா உங்களுக்கு?
செம்பழுப்புவால் காகம்

சின்ன நீர்க் காகம்         

இந்த காகம் நீர்க் காகத்தை விட சிறிதாக இருக்கும். செவ்வக வடிவத் தலையும் சிறிய அலகும் உடையது. ஏறக்குறைய 53 செ.மீ நீளமுடையது.

உடல் முழுவதும் கறுப்பாக ஒரு வித பச்சை நிற மின் மினுப்புடன் காணப்படும். தொண்டை பகுதியைச் சுற்றி வெண்ணிற திட்டு இருக்கும்.

விழித்திரை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும் கண்ணிமைகள் கறுப்பு நிறத்திலும் இருக்கும். அலகு மெலிதாகவும், அழுந்தியது போலவும், நுனியில் கொக்கி உள்ளது போன்றும் இருக்கும்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com