ஆஸ்திரேலியாவின் அபூர்வமான “கங்காரு” பெயர்க்காரணம் தெரியுமா?

கங்காரு...
கங்காரு...
Published on

ஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அதிசய விலங்கு கங்காரு என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த பதிவில் கங்காருவைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முன்னொரு காலத்தில் வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது கங்காருகளைக் கண்டு அதிசயித்து அப்பகுதியைச் சேர்ந்த சில ஆதிவாசிகளிடம் அவ்விலங்கின் பெயர் என்ன என்று கேட்க அதற்கு அந்த ஆதிவாசிகள் “கங்காரு” என்று பதில் கூறினார்கள். அவர்களுடைய மொழியில் “கங்காரு” என்றால் “தெரியாது” என்று அர்த்தம். இதன் பின்னர் இந்த விலங்குகள் “கங்காரு” என்றே அழைக்கப்பட்டன. ஆஸ்திரேலிய நாட்டு மக்களை “கங்காரூஸ்” என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கங்காரு வயிற்றில் பை உள்ள ஒரு விலங்கு ஆகும். பாலூட்டிகளில் மார்சுபியல் (Marsupials) என்றொரு பிரிவைச் சேர்ந்த உயிரினங்களின் வயிற்றுப் பகுதியில் ஒரு பை போன்ற அமைப்பு காணப்படும். இந்த வகையைச் சேர்ந்த விலங்குகளின் குட்டியானது முழு வளர்ச்சி அடையும் முன்பே பிறந்து விடுகின்றன. இதன் பின்னர் அக்குட்டியானது இத்தகைய பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடையும் வரை வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் கங்காரு இந்த பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.

கங்காரு ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. கங்காருகள் வழக்கமான மற்ற பாலூட்டிகளைப்போல நடப்பதில்லை. கங்காருகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவிக் குதித்தே செல்கின்றன. கங்காருகள் ஒரே தாவலில் ஆறு அடி உயரத்திற்கு எழும்பி சுமார் 39 அடி தூரத்தை அடையும் என்பது ஆச்சரியமான தகவல்.

அதிசய உயிரினமான கங்காருக்கள் நிலத்தில் மட்டுமே வாழ்கின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய காடுகளில் மரங்களில் வாழக் கூடிய ஒருவகை கங்காருகளும் இருக்கின்றன. இந்த வாழ்க்கைக்கு ஏற்றாற் போல இவற்றின் கால்கள் சற்று நீண்டு அமைந்துள்ளன. மரங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கூரிய நகங்களும் அமைந்துள்ளன.

நாம் சிறிது நேரம் ஓடிவிட்டுப் பின்னர் நின்றால் நம்முடைய உடலில் இருந்து வியர்வை உருவாகும். ஆனால் கங்காருவானது அது தாவி ஓடிக் கொண்டிருக்கும் வரை அதன் உடலில் இருந்து வியர்வை உருவாகிக் கொண்டே இருக்கும். அவை தாவிக் குதிப்பதை நிறுத்திய அடுத்த நிமிடமே அதன் உடலில் வியர்வை உண்டாவது நின்றுவிடும்.

கங்காருகளின் வாலானது சுமார் மூன்று அடிகள் வரை வளர்கின்றன. இத்தகைய பெரிய வாலானது கங்காருகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தாவும் சமயத்தில் அவை கீழே விழுந்து விடாமல் சமன் செய்ய பெரிதும் உதவுகின்றன. கங்காருகளின் பின்னங்கால்களை விட முன்னங்கால்கள் அளவில் சிறியதாக காணப்படுகின்றன. கங்காருவானது தரையில் நிற்கும் சமயங்களில் தனது வாலை தரையில் ஊன்றிக் கொள்ள பயன்படுத்துகிறது.

கங்காருவின் குட்டியாது அதன் தாயின் வயிற்றில் வெறும் 38 நாட்கள் மட்டுமே இருக்கும். குட்டியானது வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்ததும் தாய் கங்காரு தனது குட்டியை வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் பைக்குள் வைத்து வளர்க்க ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் தங்க மீன்கள்! சுவாரஸ்ய தகவல்கள்!
கங்காரு...

கங்காருவின் குட்டியானது மிகவும் சிறியதாக காணப்படும். இவை சுமார் ஒரு அங்குல அளவே காணப்படுகின்றன. குட்டி கங்காருவின் எடையானது பிறந்ததும் ஒரு சில கிராம் அளவே இருக்கும். குட்டி கங்காருவானது பைக்குள் இருந்தபடியே தாய்ப்பாலைக் குடித்து வளர்கிறது. சுமார் ஆறு மாத காலத்திற்குப் பின்னர் குட்டியானது முழு வளர்ச்சி அடைந்ததும் வெளியே வந்து வெளிச்சூழலில் வாழ ஆரம்பிக்கும்.

கங்காருகளுக்கு தாகம் எடுக்கும் சமயத்தில் அவை வாழும் பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உடனே பூமியில் சுமார் நான்கு அடி ஆழத்திற்குப் பள்ளத்தைத் தோண்டுகின்றன. அப்பள்ளத்தில் சுரக்கும் நீரை இவை அருந்தித் தங்களுடைய தாகத்தைப் போக்கிக் கொள்ளுகின்றன. கங்காருகள் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீரைக் குடிக்கின்றன. கங்காருகளால் தொடர்ந்து ஒரு மாதம் கூட நீர் அருந்தாமல் வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com