
சமீப காலமாகவே இணையத்தில் பொது அறிவு சார்ந்த கேள்விகள் உலாவி வருகின்றன. இந்த கேள்விகள் பலருக்கும் உதவிகரமாகவே இருக்கின்றன. குறிப்பாக இது ஐஏஎஸ்-ஐபிஎஸ் தேர்வுக்கான தயாரிப்பாக இருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதேனும் போட்டித் தேர்வாக இருந்தாலும் சரி, பங்கேற்பாளர்கள் தங்கள் பொது அறிவை அதிகரிக்க பிரபலமான வினாடி வினா கேள்விகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இணையத்தில் உலாவி வரும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணலாம்.
முட்டைக்குள் இருக்கும் போதே குஞ்சுகள் பேச தொடங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சமீபத்தில் தான் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி மாணவரான கேப்ரியல் ஜார்ஜிவிச் கோஹன் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளார். பொதுவாகவே பெண்ணின் வயிற்றில் வளரும் கரு ஒவ்வொரு செயலாக செய்வது போலவே, குஞ்சுகளும் முட்டைகளுக்குள்ளேஎயே செயல்பட தொடங்கிவிடுமாம்.
ஒரு உயிரினம் வாயின் வழி குஞ்சுகளை பிரசவிக்கும் திறன் கொண்டுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அது பாம்பு என்று நினைத்தால் நிச்சயம் கிடையாது. அந்த உயிரினம் பெரும்பாலும் நம்மை சுற்றி உள்ளன. அதிக அளவில் சத்தங்களையும் எழுப்புகின்றன. கண்டுபிடித்துவிட்டீர்களா? தவளையே தான் அது. அவை தன்னுடைய வாயில் வைத்து முட்டைகளை அடை காக்கின்றன. பொரிக்கும் தருணத்தில் தண்ணீருக்கு மேலே வாய் வழியாக முட்டைகளை வெளியேற்றுகின்றன.
தேனீக்களால் சூரியனின் புற ஊதாக் கதிர்களை காண முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த பட்டியலில் தற்போது மேலும் பல உயிரினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் வெளவால்கள் போன்ற விலங்குகளாலும் புற ஊதா கதிர்களை காண முடியும் என்பது ஆரய்ச்சியில் தெரிய வந்துள்ளது.