உலகிலேயே அதிக ரெயில் பெட்டிகள் செய்யும் தொழிற்சாலை எங்குள்ளது தெரியுமா..?

Integral Coach Factory...
Integral Coach Factory...
Published on

சென்னை பெரம்பூரில், 511 ஏக்கர் பரப்பளவில் ஐ.சி.எஃப் (ICF) என்று சுருக்கமாக  அழைக்கப்படும் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) 1952 -இல் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு 2.10.1955 முதல் ரயில்பெட்டிகள் உற்பத்தி தொடங்கியது. அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட  முதல் தொழிற்சாலை இது. சுவிஸ் நாட்டு  தொழில்நுட்பத்துடன் இணைந்து தயாரிக்க ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும்.  இந்த ஐ. சி. எப்.  ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஆரம்பத்தில் வருடத்திற்கு 350 ரயில் பெட்டிகளை தயாரித்தது.

ஆரம்பத்தில், இத்தொழிற்சாலை மூன்றாம் வகுப்புப் பெட்டிகளின் கூடுகளை மட்டுமே தயாரிக்கும் திறனுடையதாக இருந்தது. பெட்டியின் உட்புற கலன்களை ரயில்வே தொழிற்பேட்டையில் செய்து கொள்வதாக இருந்தது. 2.10. 1962-ஆம் ஆண்டு முதல் உட்புற கலன் வடிவமைக்கும் பட்டறையும் நிறுவப்பட்டது. படிப்படியாக உற்பத்தித் திறன் கூட்டப்பட்டு, 1974 வாக்கில் முழுமையான 750 பெட்டிகள் தயாரிக்கக்கூடிய நிலையை எட்டியது.

தற்போது ஆண்டிற்கு 1200 பெட்டிகளுக்கு மேல் தயாராகிறது. தைவான், பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், உகாண்டா, தான்சானியா, நைஜீரியா, வியட்நாம்,  இலங்கை என உலகின் பல்வேறு நாடுகளில் இங்கு தயாரான ரயில் பெட்டிகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் பெட்டிகள் மட்டுமின்றி ராணுவத்திற்கு தேவையான மருத்துவ பெட்டிகள், சரக்கு பெட்டிகள், அவசர கால மீட்பு பெட்டிகள் மற்றும் உணவை பெட்டிகள் என பல்வேறு வகையான பெட்டிகளை தயாரித்து வருகிறது. இங்கு,  பயணிகள் பெட்டிகள் தவிர, டீசல் - பவர் கார்கள், கோபுர கார்கள்,  குளிரூட்டப்பட்ட பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள், விபத்து நிவாரண மருத்துவ ஊர்திகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

13,000 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்தத் தொழிற்சாலையில் ஒருநாளுக்கு ஆறு பெட்டிகள் வீதம் தயாரிக்கப்படுகிறது.  2011 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் 43,551 ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

13,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஐ. சி. எப் தனக்கு தேவையான மின்சாரத்தை காற்றை மின் சக்தி மூலமாக 10 மெகாவாட் மின்சாரம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனது மின்சார தேவைக்காக  திருநெல்வேலியில் ஐசிஎஃப் நிறுவிய காற்றாலைகள் மூலம், 20 லட்சம் மின் அலகுகள்  உற்பத்தி செய்யப்படுகிறது.  இது  ஐசிஎஃப்பின் மின்தேவைகளில் 80 சதவீதம் ஆகும்.

2011-ஆம் ஆண்டு முதல் இங்கு துருப் பிடிக்காத எஃகினால் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.  வருடம் ஒன்றுக்கு 600 முதல் 700 ரெயில் பெட்டிகளை தயாரித்து வந்த ஜசிஎப் 2014 ம் ஆண்டில் 32 வகைகளில் 1622 ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்தது!  உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக, சென்னை ஐசிஎப் திகழ்ந்து வருகிறது. வருடத்துக்கு சராசரியாக, 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை, 71,000 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இது ஓர் உலக சாதனை.

அண்டை நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று 14 நாடுகளுக்கு, ரயில் பெட்டிகளை ஐசிஎப் ஏற்றுமதி செய்கிறது. வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது. பாதுகாப்பு, வேகம், வசதி, செயல் திறன் ஆகியவற்றில் வந்தே பாரத் ரயில் முதலிடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
Integral Coach Factory...

அதிவேக இரயில் என்று பாரதப்பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’  இங்குதான் உருவானது. “இதற்கான வடிவமைப்பு முதல் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அந்நிறுவனம் எடுத்துக் கொண்டது 18 மாதங்களே. இது மகத்தான சாதனையாகும். அப்போது தொழிற்சாலையின் பொது மேலாளரான இருந்த சுதான்ஷூ மணி இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து 18 மாதங்களில் உருவாக்கினார். அதற்கு அப்போது இரயில் – 18 என  பெயரிடப்பட்டது. பிறகு, அது வந்தே பாரத் பெயர் மாற்றப்பட்டு, தில்லி – வாரணாசி மார்க்கத்தில் பாரதப் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com