இந்த கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம் ஏன் தெரியுமா குட்டீஸ்?

Alhudayb village...
Alhudayb village...
Published on

நிறைய அதிசயங்கள் நிறைந்த பூமி இது. பூமியில் உள்ள அபூர்வமான பல விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த கிராமம். இங்கு மழையே பெய்வதில்லையாம். உலகில் அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல மழையே சிறிதும் பெய்யாத  கிராமம் ஒன்று உள்ளது. பாலைவனமாக இருக்குமோ என எண்ண வேண்டாம். இங்கு மக்கள் வசித்து வருகிறார்கள்.

மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்ஹூடாய்ப் எனும் கிராமம் உள்ளது. இது தரை மட்டத்திலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் சிவப்பு மணற்கற்களால் ஆன மேடையில் இந்த கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மசூதிகள் இரண்டு பள்ளிகள் இரண்டு உள்ளன. ஹூடாய்ப் கோட்டைக்கு கீழே "ஆசிர்வாத குகை" ஒன்றும் உள்ளது. மலையின் உச்சியில் அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பல சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம் இந்த கிராமம் மேகங்களுக்கும் மேல் அமைந்துள்ளது என்பதால்தான். மழை இல்லாததால் இப்பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. இங்கு பகலில் அதிகமான வெப்பமும் இரவில் உறைபனி குளிரும் இருக்கும். இப்பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமான அளவு இல்லாததும்,  மேகங்களுக்கும் மேல் பகுதியில்  கிராமம் அமைந்துள்ளதாலும் மழை பெய்வது இல்லை. 

இதையும் படியுங்கள்:
மறந்தும் இந்த மூன்றுப் பொருட்களை முகத்தில் பயன்படுத்த வேண்டாம்!
Alhudayb village...

பொதுவாக மழை மேகங்கள் சமவெளியிலிருந்து 2000 மீட்டருக்குள் குவியும். ஆனால் இந்த கிராமம் 3200 மீட்டர் உயரத்தில் இருப்பதால் மழை பெய்வதில்லை. பழங்கால மற்றும் நவீன கட்டிடக்கலையை இந்த கிராமத்தில் பார்க்க முடிகிறது. அத்துடன் மிக உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தை பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com