‘ஜாலி’ ஹோலி ஏன் கொண்டாடுறாங்க தெரியுமா?

ஹோலி பண்டிகை...
ஹோலி பண்டிகை...
Published on

லவித வண்ணங்களை ஒருவர்மீது ஒருவர் தூவிக்கொண்டு மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாடும் பண்டிகையான ஹோலி இந்தியாவில் மிகவும் பிரபலமான கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்றாகும். இந்து கலாச்சாரத்தில் ஹோலி மிகவும் மங்களகரமான பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த வருடம் ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி வருகிறது.

ஹோலி பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாள் கொண்டாடப்படுவது, சோட்டி ஹோலி. நெருப்பைச் சுற்றி அமர்ந்து பிரஹலாதன் நரசிம்மர் கதைகளைச் சொல்ல, அதைக் கேட்டுவிட்டு இனிப்பைப் பரிமாறிக்கொண்டு, நெருப்பைச் சுற்றி ஆடுவதோடு இந்த நாள் நிறைவடையும்.

இரண்டாவது நாளை ‘ரங்வாலி ஹோலி’ என்று கூறுவார்கள். இந்த நாளில்  ‘குஜியா’ என்னும் இனிப்பு வகையை உண்டு, ‘தண்டாய்’ குடிப்பது வழக்கமாகும். தண்டாய் என்பது பாலுடன் பழங்கள் சேர்த்து அருந்தும் பானமாகும். பிறகு ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தடவிக்கொள்வார்கள். பலூன்களில் நீரை நிரப்பி ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடுவார்கள்.

ஹோலி பண்டிகை நம்முடைய பழமையான கலாச்சாரமாகும். பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேஷத்தில் வசந்தக் காலத்தை வரவேற்கும்விதமாக ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலி கொண்டாடப்படுவதன் முக்கியக் காரணம், ராதா கிருஷ்ணரின் காதலை பறைச்சாற்றவேயாகும். பூக்கள் அல்லது வண்ணப்பொடிகளைத் தூவி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். இரணியகசிபுவை நரசிம்மர் வதம் செய்த வெற்றியைப் போற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றி என்பது குறிக்கோள் அல்ல… அது ஒரு இடையறாத பயணம்!
ஹோலி பண்டிகை...

தென்இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலியை ‘மஞ்சள் குளி’ என்று கூறுவார்கள். மஞ்சள் கலந்த வண்ண நீரை ஒருவருக்கொருவர் தெளித்துக்கொண்டு மகிழ்வார்கள்.

ஹோலி இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலும் பிரபலமாகும்.

சமீபகாலமாக எல்லா மதத்தவரும் ஹோலி கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது ஹோலி பண்டிகை ஒரு குழுவினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆர்வம் உள்ளவர்கள் சென்று கலந்துகொண்டு எல்லோருடனுமே சேர்ந்து மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடலாம் என்பது வழக்கமாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com