
பெண்கள் மேக்கப் செய்து கொள்ளும்போது கண்களுக்கு அழகாக காஜலும், உதட்டுக்கு லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொள்வார்கள். சிலருக்கு விரைவில் காஜல் அழிந்து கண்களுக்கு அடியில் மை படிந்திருக்கும். உதட்டில் லிப்ஸ்டிக் திட்டுத்திட்டாக இருக்கும். சில டிப்ஸ்களை பயன்படுத்தினால் இதைத் தவிர்க்கலாம்.
காஜல் டிப்ஸ்;
1. முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவிய பின்பு டவலால் ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். காஜல் போடும்போது கண்களில் ஈரம் இருக்கக்கூடாது.
எண்ணெய்ப் பசை அதிகமாக உள்ள முகமாக இருந்தால் முதலில் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை எடுக்க வேண்டும். அதற்கு எண்ணெய் உறிஞ்சும் தாள்களை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பவுடரை கண்ணுக்கடியில் தூவி மென்மையாக துடைத்தெடுக்க வேண்டும்.
2. முதலில் இமைகளில் லேசான ஐ ப்ரைமர் அல்லது சிறிது கன்சீலரை பயன்படுத்த வேண்டும். இது காஜல் சிறப்பாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
பின்னர் அதற்கு பொருத்தமான ஐ ஷேடோவை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். மேக்கப் பிரஷ் மூலம் ஐ ஷேடோவை எடுத்து கண்களுக்கு அடியில் மென்மையாக அப்ளை செய்யவேண்டும்.
3. நல்ல குவாலிட்டியான காஜலை தேர்வு செய்யவேண்டும். அது வாட்டர் ப்ரூப் உள்ள காஜல் ஆக இருக்கவேண்டும். அது நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும்.
4. முதலில் எடுத்த உடன் அழுத்தமாக கண்களில் காஜலை போடக்கூடாது. ஒரு மெல்லிய லைன் போட்டு, பின்பு அதன் மேல் இன்னொரு லைனிங்கை சேர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கண்களுக்கு கீழே மை படியாமல் இருக்கும்.
5. கைப்பையில் எப்போதும் சிறிய ஐப்ரோ பென்சில் அல்லது காஜலை வைத்துக்கொள்ள வேண்டும். லேசாக அழிந்துவிட்டால் அதை லேசாக டச் அப் செய்து கொள்ளலாம்.
6. கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவேண்டும் குறிப்பாக கண்களை தொடக்கூடாது. பலர் அழகாக மேக்கப் செய்து கொண்டு கண்ணை அடிக்கடி தேய்த்துக் கொள்வார்கள். அப்போது காஜல் அழிந்து முகத்தில் அசிங்கமாக தெரியும்.
லிப்ஸ்டிக் டிப்ஸ்;
1. லிப்ஸ்டிக் போடும் முன்பு மென்மையான டூத் பிரஷ் மூலம் உதடுகளை மெதுவாக தேய்க்க வேண்டும். இது மென்மையான மேற்பரப்பை உருவாக்குகிறது. லிப்ஸ்டிக் நன்றாக ஒட்டிக்கொள்ளவும் உதவும்.
2. இன்று உதட்டில் லிப் பாமை தடவி ஈரப்படுத்த வேண்டும். பின்பு லிப்ஸ்டிக் ஷேடுடன் சேடுடன் மேட்ச் ஆகக்கூடிய லிப் லைனரினால் உதடுகளில் லைன் வரைய வேண்டும். லிப்ஸ்டிக்கை மெதுவாக ஒரு கோட்டிங் போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு இரண்டாவது கோட்டிங் போடவேண்டும்.
3. லிக்விட் மேட் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தினால் அது நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். பின்னர் எண்ணெய் அல்லது கிரீஸ் உணவுகளை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். அது லிப்ஸ்டிக்கை அழித்துவிடும். கைப்பையில் லிப்ஸ்டிக்கை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதை லைட்டாக டச் அப் செய்து கொள்ளலாம்.