
அது ஒரு அடர்ந்த வனம்
அதனுள் ஓர் படர்ந்த ஆலமரம்
அதன் கிளையில் அமர்ந்திருந்தது ஒரு புறா
மரத்தை தொட்டவாறு ஓடியது ஒரு புழா
அதில் பாவம் தவறி விழுந்து
தத்தளித்தது ஒரு எறும்பு
அதை பார்த்த புறா போனது அதிர்ந்து.
ஒரு இலையை பறித்து போட்டது கீழே
எறும்பு தப்பியது ஏறி அதன் மேலே
நன்றி பெண் புறாவே
இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேனே
உயிர் பிழைத்தேன் இன்று உன்னாலே
இது நடந்த மறு நாளு
நுழைஞ்சான் காட்டுக்குள் ஓர் ஆளு
அவன் கைகளில் அம்பு வில்லு
நம்ம புறாவை பார்த்திட்டு விட்டான் ஜொள்ளு
அடிக்க இருந்தான் குறி வெச்சு
எறும்பு அவன் காலை கடிச்சு
வேடன் வச்ச குறி தவறி போச்சு
புறாவும் பறந்தோடி போச்சு
அன்னிக்கு உன்னாலே நான் பிழைச்சேன்
அந்த நன்றி கடனை இன்று நான் அடைச்சேன்
சொல்லி மனதுக்குள் நடந்தது எறும்பு
பாடம் கற்க வேண்டும் நாம் இதிலிருந்து
வாழ்க்கையில் நன்றி மறவாதிருந்து!