ஹாய் குட்டீஸ்! இந்தக் கட்டுரையில், பறவைகளின் ராஜாவான கழுகுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும், அதன் வகைகளையும் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம். வாங்க, கழுகுகளின் உலகத்திற்குள் போகலாம்!
இவ்வுலகில், சுமார் 60 கழுகு இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன. கழுகானது அக்சிபிட்ரிடே என்ற பறவை குடும்பத்தை சேர்ந்தவை. கழுகுகள் 'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படுகின்றன.
இவை மணிக்கு சுமார் 80 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். பறக்கும்போது வேறு பறவைகளை வேட்டையாடுவதற்கும் இந்த வேகத்தைப் பயன்படுத்துகின்றன.
இவற்றால் இரண்டு மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள இரையை கூட துல்லியமாக கணிக்க முடியும். பாம்புகளைத் தவிர நிலவாழ் விலங்குகளான முயல், நரியின் குட்டி, பிறந்த மான் குட்டி, அதேபோல் நீர் வாழ் உயிரினங்களான மீன்கள் போன்றவைகளை இரையாகப் பிடித்து சாப்பிடும்.
கழுகுகள் மற்ற பறவைகளிடம் சேர்ந்து கூட்டமாக பறப்பதில்லை. பறவை இனங்களிலேயே மிக உயரமாக பறக்கும் பறவையாகும். உயரமாகப் பறக்கும் சில கழுகு வகைகள் - சாலிட்ரி ஈகிள், கோல்டன் ஈகிள், ஹார்பி ஈகிள், மற்றும் வெட்ஜ்-டெயிலட் ஈகிள்.
தன்னைவிட மூன்று மடங்கு அதிக எடை உள்ள இரையை கூட பிடித்து சாப்பிடும் சக்தி உள்ளது.
சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடிய பறவையாகும். அவற்றின் உறுதியான எலும்பு அமைப்பு, திறமையான உள் உறுப்புகள் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன.
கழுகின் எடையானது, கழுகினங்களை பொறுத்து ஒன்று முதல் ஒன்பது கிலோ வரை இருக்கும். இந்தியாவில் காணப்படக்கூடிய கோல்டன் ஈகிள், பிணம் தின்னி கழுகு, பழுப்பு நிறக் கழுகு, பாம்புக் கழுகு என்பவை 6.7kg வரை இருக்கும்.
கூறிய நகங்களும், வளைந்த ஊசியான அலகும் இதற்கு இரைகளைப் பிடித்து கிழித்து இறைச்சியை உண்ண பயன்படுகின்றன. வேட்டையாடுவதைத் தவிர, இந்த வலிமையான நகங்களும் அலகும் கழுகுகளுக்கு தற்காப்புக்கும் உதவுகின்றன. ஆபத்து ஏற்படும்போது, இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன.
ஒரு நாளைக்கு இரைத் தேடலின் அவசியம், இருப்பிடம் தேடுதல், இனப்பெருக்க காலம் ஆகியவற்றைப் பொறுத்து கிட்டத்தட்ட கழுகானது 150 முதல் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கும்.
கழுகு மிகவும் புத்திசாலியான பறவை இனமாகும். இதற்கு கண் பார்வைத் திறன் மனிதனை விட நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது.
கழுகுகள் மிகத் தீவிரமான ஒளியையும் தாங்கும் திறன் கொண்டிருப்பதால் சூரியனை நேரடியாக பார்க்கும்.
40 வயதை கடந்த சில கழுகுகள், தனக்கு பாரமாக இருக்கின்ற வளைந்த அழகுகளை பாறையின் மீது முட்டி முட்டி உடைக்கும். அதேபோல் சிறகுகளையும் தன் அலகால் கொத்தி கொத்தி இழந்து விடும். பிறகு புதிய இறக்கைகள் முளைத்தவுடன் மீண்டும் புதிய பலத்தை அடைந்து விடும்.