

உடலின் முக்கிய உறுப்பான கண், பல நுண்ணிய வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதில் முக்கியமாகக் 'கண் சிமிட்டுதல்' பற்றிப் பார்க்க வேண்டும். நம் கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது; கண் இமைகள் கண் உலர்ந்து போவதைத் தடுக்கின்றன.
இமைகளின் விளிம்பு வரை சுரப்பிகள் உள்ளன. நாம் கண் சிமிட்டும் போதெல்லாம், கண்கள் உலர்ந்து போகாமல் இருக்கத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.
இமைகளின் விளிம்பில் 20 முதல் 30 வரை சுரப்பிகள் உள்ளன. கண் சிமிட்டும் போதெல்லாம் இவை கண் விழிகளை அலம்புகின்றன.
கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது. நாம் கண்ணீர் விடும்போது, கண் விழியின் மேல் இருக்கும் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது; இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் அவசியமாகிறது.
கூடுதலாக, கண் பார்வையின் கவனம் மாறுபடும் போதே அதிகமாகக் கண் சிமிட்டல் இருக்கிறது என அறியப்படுகிறது.
அதாவது, ஒரு பார்வையிலிருந்து இன்னொரு பக்கம் கவனத்தைத் திருப்பும் போது, தொடர்ச்சியான ஒரு திசையையே பார்த்துக் கொண்டிருப்பதை விட, புதிதாக ஒரு இடத்தில் கவனம் செலுத்துவது கண்களுக்கு இலகுவாக இருக்கும். அதனால் இமைகள் மூடித்திறப்பது சுலபமாக நடக்கிறது.
ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 தடவைகளுக்கும் மேல் கண்களைச் சிமிட்டுகிறார். சராசரியாக 0 முதல் 5 விநாடிகளுக்கு ஒருமுறை கண்கள் சிமிட்டப்படுகின்றன.
இந்தப் பணிகளைச் செய்யும் கண்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தூசி மற்றும் புகை உள்ள இடங்களில் தொடர்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே சூரிய நமஸ்காரம் செய்வது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.