Fireworks Historical Information!
crackers for diwali

பட்டாசு வரலாற்று தகவல்கள்!

Published on

ந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசுக்குத்தான் முதலிடம். பட்டாசின் வரலாறு மிகவும் சுவாரசியம் மிகுந்தது. எப்படி பட்டாசு வந்தது தெரியுமா?

சீனாவின் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் பிற்பகுதியில்  போரில் பயன்படுத்திக்கொண்டிருந்த ஒரு வித வெடிமருந்தில் இருந்து பரிணமித்ததே இந்தப் பட்டாசு.

சீனாவில் புத்தாண்டு, நிலவு திருவிழாவில்  பயன்படுத்தப்பட்டது.

சீன நம்பிக்கையின்படி பட்டாசுகள் வெடிப்பது தீயச் சக்தியை விரட்டுவதாக நம்பப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர் பரசுராம் கோடேவின் ஆய்வுப்படி 13-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அரேபியர்கள் மூலம் பட்டாசு இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஜயநகர மன்னர் இரண்டாம் தேவரையாவின் அரண்மனையில் பெர்சிய நாட்டு தூதரால் முதன்முதலில் பட்டாசுகள்  கொண்டு விழா நடத்தப்பட்டது.

பின், முகலாய மன்னர்கள் பட்டாசு தயாரிக்கும் கலையைச் சீனாவிடம் தெரிந்துகொண்டு இந்தியாவில் பட்டாசு செய்ய ஆரம்பித்தனர்.

18-ம் நூற்றாண்டு முதல்தான் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் ஆரம்பித்ததாக வரலாறு ஆய்வுகள் கூறுகின்றன.

பெரும்பாலும் சீன, ஐரோப்பியாவிலிருந்துதான் அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. பின் கல்கத்தா, சிவகாசியில் பட்டாசு ஆலைகள் தொடங்கப்பட்டன.

இதில் சிவகாசி இன்றுவரை இந்தியாவின் முக்கிய பட்டாசு உற்பத்தியில் முதலிடமாக திகழ்கிறது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒலி மாசுபாடு, பறவைகள், விலங்குகள் நலன் கருதி பெரும்பாலான நாடுகளில் அதிக ஓசை உள்ள பட்டாசுகளை விரும்புவதில்லை.

இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சிவகாசி ஆகும்.

உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா ஆகும்.

பட்டாசு வெடிக்க சில விதிகள்.

பட்டாசு வெடிக்கும் முன், ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். எரிந்துமுடிந்த கம்பி மத்தாப்பு போன்றவற்றை இதில் போடலாம்.

ஒரு கம்பளிப் போர்வையும் பக்கத்தில் வைத்துக்கொண்டால், தீப்பற்றினால் போர்த்தி அணைக்கலாம்.

காலில் செருப்பு அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

வானில் வெடிக்கும் வெடிகளை மைதானத்திற்கு எடுத்துச் சென்று வெடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நம்ப முடியாத விஷயங்கள் சில… ஆனால் உண்மை!
Fireworks Historical Information!

வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்கும்போது ஜன்னல்கள் கதவுகளை மூடிவைத்தால் வெடித்த வெடிகள், புகை உள்ளே வராது.

சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் வெடிகளை வைத்துக்கொண்டு வெடிக்கக்கூடாது.

செல்போனும் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.

கையில் வைத்துக்கொண்டு வெடித்தல், கொளுத்தி தூக்கி போடுதல் போன்றவை செய்யக்கூடாது. இதனால் கைகளில், கால்களில் வெடித்து புண்ணாகும்.

எரியும் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி விளக்கு போன்றவற்றை பட்டாசு கட்டுகளுக்கு (பட்டாசு பண்டல்) அருகில் வைக்கக்கூடாது.

வெடிக்காத பட்டாசுகளை முறித்து, மருந்துகளை சேகரித்து பட்டாசை கைகளில் எடுத்து வெடிக்கக்கூடாது. அதே சமயம் பட்டாசு திரி அணைந்ததுபோல் இருக்கும். உடனே பக்கத்தில் போகக்கூடாது. அதனை உடனே தண்ணீர் ஊற்றி அணைத்துவிடலாம்.

பெரியவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள்.

வெடித்தபின் கைகளை நன்றாக  சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

 பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள் குட்டீஸ்..!

logo
Kalki Online
kalkionline.com