நம் இந்தியாவில் சாதனையாளர்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்படுகின்றன?

விருதுகள் ...
விருதுகள் ...

ந்தியாவில், பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் பல மதிப்புமிக்க விருதுகள் உள்ளன. பொதுத்துறையில் ஆரம்பித்து  ராணுவம் வரை அனைத்திலும் சாதனை செய்து மற்றும் நாட்டிற்குப் பெருமை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் படுகின்றன. அதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள் குழந்தைகளே!

1. பாரத ரத்னா

பாரத ரத்னா
பாரத ரத்னா

இது இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது. இது அறிவியல், இலக்கியம், கலை மற்றும் பொது சேவைகள் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில், இந்த விருது பிரிவில் விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன. இந்த விருது ஒரு பீப்பல் (peepal leaf) இலையின் வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்றும் வெண்கல நிறத்தில் உள்ளது. நடுவில் சூரியனின் சின்னம் மற்றும் தேவநாகரி ஸ்கிரிப்டில் அதன் கீழே ‘பாரத ரத்னா’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாரத ரத்னா விருது ஆண்டுக்கு அதிகபட்சம் மூன்று பேருக்கு மட்டுமே வழங்கப்படும்.

2. பத்ம விபூஷன்

பத்ம விபூஷன்
பத்ம விபூஷன்

கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுச் சேவைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த நபர்களுக்கு பத்ம விபூஷண், இரண்டாவது உயரிய சிவிலியன் விருது வழங்கப்படுகிறது. இது ஒரு வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. வெண்கல நிறத்தில் உள்ளது. தேவநாகரி ஸ்கிரிப்டில் இல் தாமரை மலருக்கு மேலேயும் கீழேயும் ‘பத்மா’ மற்றும் ‘விபூஷன்’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருது பெறுவோர் எண்ணிக்கையில் வரம்பு எதுவும் இல்லை.

3. பத்ம பூஷன்

பத்ம பூஷன்
பத்ம பூஷன்

இது இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது. அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் (பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து) சேவை உட்பட எந்தவொரு துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. பத்ம பூஷனின் வடிவமைப்பு பத்ம விபூஷண் வடிவமைப்பைப் போலவே உள்ளது. அனைத்து புடைப்புகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!
விருதுகள் ...

4. பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ

முக்கியத்துவம் வாய்ந்த விருதுகள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. அரசு ஊழியர்களின் சேவை உட்பட எந்தவொரு துறையிலும் சாதனை படைத்த தனிநபர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

5. கேலண்ட்ரி விருதுகள்

கேலண்ட்ரி விருதுகள்
கேலண்ட்ரி விருதுகள்

ந்த விருதுகள் வீரம் மற்றும் வீரச் செயல்களை அங்கீகரிக்கின்றன. 

பரம் வீர் சக்ரா: எதிரியின் முன்னிலையில் வீரச் செயல்களை செய்ததிற்கான, இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ அங்கீகாரம் கொண்ட பதக்கம் இது.

மஹாவீர் சக்ரா: மிகுந்த துணிச்சல் மற்றும் போரில் தலைமையேற்றதற்காக  இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

வீர் சக்ரா: எதிரியை  துணிச்சலுடன் எதிர்கொண்ட செயல்களுக்காக வழங்கப்பட்டது.

அசோக சக்ரா: மிக உயர்ந்த அமைதி கால(Peace time)  வீர விருது.கீர்த்தி சக்ரா: வெளிப்படையான துணிச்சலுக்காக வழங்கப்படுவது.

சௌரிய சக்ரா: எதிரியின் முன்  துணிச்சலான செயல்களை செய்ததற்காக அங்கீகரிக்கப்படுவது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com