"அப்பத்தா சொல்லுதேன் கேட்டுக்கோ!"

Grandma’s Tale of Love, Nature, and Kindness
Grandma’s Secret Lessons
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

"அது அந்தக் காலம்! அது அந்தக் காலம்!

அடிக்கடி புலம்புவதேன் அப்பத்தா?"

"அப்பத்தா சொல்லுதேன். கேட்டுக்கோ பேராண்டி!

அன்பால் அனைவரையும்

அனுசரித்துச் செல்லவும்,

ஆதரவுடன் இருகரம் நீட்டவும்,

இன்முகத்துடன் பழகவும்,

ஈதலைக் கற்றுக் கொடுக்கவும்

வழி வகுத்தது அந்தக் காலம்!

இதையும் படியுங்கள்:
Story for children: Grateful Elephants!
Grandma’s Tale of Love, Nature, and Kindness

உதவி செய்ய முன்வந்து

ஊருக்கும், நாட்டுக்கும் உழைக்கவும்,

எதிலும் துணிவுடன் செயலாற்றி,

ஏற்றத்தாழ்வின்றி இணைய வைத்தது அந்தக் காலம்!

ஐயமின்றிப் பிறர்க்குத் தொண்டாற்றவும்,

ஒற்றுமையாய் ஓட்டு வீட்டில் குடும்பத்தினருடன் உறவாடவும்,

ஔடதமென மனிதநேயத்துடன் பழகவும், நற்பணிகளை ஆற்றவும் கற்றுக்

கொடுத்தது அந்தக் காலம்!

பெரியோர்க்கு மதிப்பும், மரியாதையும் அளித்து,

பிறர் குறையில் நிறைகாணவும்,

உற்றார் உறவினருடன் கூடி வாழ்ந்தும்,

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ,

அறிவுறுத்தியது அந்தக் காலம்!

விளையாட்டுத் திடல்கள்

விலை மணலாகாமல் தடுத்து,

விளையாட்டுகளில் இளைய சமுதாயம் உற்சாகத்துடன்

பங்கேற்று விளையாடச் செய்து,

உடலும், மனமும் வலிமை பெற

உதவியது அந்தக் காலம்!

இதையும் படியுங்கள்:
Bullock lost ; Lesson learnt!
Grandma’s Tale of Love, Nature, and Kindness

சுற்றுப்புறச் சூழலைச்

சுகாதாரப் பசுமையாக்கி,

மாசு மறுவற்ற காற்றை உற்பத்தி செய்து,

வழிப்போக்கர்கள் வழியில்

இளைப்பாற உதவும்

மரங்களைப் பாதுகாத்தது

அந்தக் காலம்!

இயற்கை உணவினைக் கடவுளாக வணங்கவும்,

சுத்தம்-சுகாதாரம் கடைபிடிக்கவும்,

கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்ற

புரிதல்களைப் புரிய வைத்தது

அந்தக் காலம்!

குறைகளிலும் நிறைவைக் கண்டது

அந்தக் காலம்!

நிறைவுகளில் வெறுமையைக் காண்பது

இந்தக் காலம்!

புரிந்ததா பேராண்டி?"

"அருமை அப்பத்தா! அருமை! அது அந்தக் காலம்! அருமையான, பொன்னான காலம்!"

logo
Kalki Online
kalkionline.com