பிரச்சனைகளை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

problems
problems
gokulam strip
gokulam strip

நாம் அனைவருக்கும் வாழ்க்கையில் சவால்கள், பிரச்னைகள், கோபதாபங்கள் வருகின்றன. அதை எப்படி தகர்த்து பிரச்னைகளை முறியடிக்க இக்கதையை உதாரணமாக எடுக்கலாம்.

"எதற்கெடுத்தாலும் தான் நினைத்தது நடக்கலையேன்னு தன் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருப்பாள் ராணி.

ஒரு அடி எடுத்து வைத்தால் மூன்றடிச் சரக்குகிறதே? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எனக்கு ராசியே இல்லை என எதையாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பாள்.

அவளுக்கு தன்னம்பிக்கை, தைரியம் சொல்லி தேற்றுவாள் அவள் அம்மா. ஒரு நாள் ராணியை சமையல் அறைக்கு அழைத்து சென்று மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பி கொதிக்க வைத்து முதல் பாத்திரத்தில் உருளையை நறுக்கிப் போட்டும், இரண்டாவதில் முட்டையையும், மூன்றாவதில் காப்பித் துாளைப் போட்டாள். சிறிது நேரத்தில் மூன்றையும் இறக்கி, மகளைக் கூப்பிட்டு, இதில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? எனக் கேட்டாள்.

ஒன்றும் புரியலை என்றாள் ராணி. மூன்று பாத்திரங்களிலும் சம அளவு வெப்பம் அளிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் தன் இயல்புக்கு ஏற்ப மாறி மாறி உருளைக்கிழங்கை வேக வைத்ததும் மென்மையாக்கியது.

இரண்டாவது முட்டையானது திரவநிலையிலிருந்து கொதித்ததும் திடமாகியும், மூன்றாவது காபித்தூள் கொதித்ததும் நீருடன் கலந்து விட்டது. ஒவ்வொன்றும் இயல்புக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டது.

இதே மாதிரி நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் சவால்கள், பிரச்னைகள் வரும். அதை நாம் உருளைக் கிழங்கு போல் மென்மையாகியும், முட்டை போல் மென்மையாக வலுபெறவும், காப்பி துளைப் போல பிரச்னையோடு மடியப் போகிறோமா என்பதை நாம் தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்றாள் அம்மா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை – காதல்!
problems

இதைக் கேட்டதும், ராணி இனிமேல் புலம்பாமல் தன்னம்பிக்கையோடு தன் பிரச்னைகளை எதிர் கொண்டு சவால்களை எதிர்கொள்வேன், வாழ்வில் வெற்றி பெறுவேன் எனக் கூறி தன் அம்மாவின் தோளில் சாய்ந்தாள் சிரித்துக் கொண்டே ! எதையும் புரிந்து கொண்டு செயல் பட்டால் தோல்வியை எதிர்த்து வெற்றி பெறலாம்".

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com