லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

கோவில்களில் யானை...
கோவில்களில் யானை...

-எம். பாரதி

ன்றாகப் படித்து, பரிட்சையில் நூற்றுக்கு நூறு மார்க்  வாங்கவேண்டும் என்று யாருக்கெல்லாம் ஆசை? அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இக்கட்டுரை.. ‘நூறு மார்க் வாங்கவேண்டும் என்று வீட்டில் பெற்றோர்கள் சொல்கிறார்கள்; பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், என்னால் அது முடியுமென்று தோன்றவில்லை’ என்று நினைக்கிற பிரிவைச் சேர்ந்தவரா நீங்கள்? அப்படி யென்றால், இந்தக் கட்டுரையைக் கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். படிப்பது மட்டுமல்ல; படித்தவற்றை நினைவில் நிறுத்தி அதன்படி செயல்படவும் வேண்டும்.

‘நாமாவது  நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவதாவது!  நோ சான்ஸ்!’ என்ற எண்ணம் உங்கள் மனதில் உட்கார்ந்துகொண்டு இருந்தால்,

இதையும் படியுங்கள்:
உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் கரிசலாங்கண்ணி!
கோவில்களில் யானை...

சிரமம் பார்க்காமல், அந்த எண்ணத்தைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு, ஜோராகக் கை தட்டி விட்டு, ‘என்னாலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடி யும்’ என்ற தன்னம்பிக்கையின் விதையை உங்கள் மனதில் விதைத்துவிட்டு மேலே படியுங்கள்.

கோவில்களில் யானையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? யானையின் தலை மற்றும், தும்பிக்கையிலிருந்து, உங்கள் தலையைத் திருப்பி, அதன் கால்களைப் பாருங்கள்! ஒரு சங்கிலியால் அதன் ஒரு காலைக் கட்டி வைத்திருப்பார்கள். யானையும் அந்த இடத்திலேயே முன்னும், பின்னுமாக அசைந்துகொண்டிருக்குமே தவிர, அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்வதற்கு முயற்சி செய்யாது. யானை போன்ற ஒரு பெரிய மிருகம் அந்தச் சங்கிலியை பலமாக ஒரு இழு இழுத்தால், சங்கிலி பணாலாகிவிடும். ஆனால் எந்த யானையுமே அப்படிச் செய்வதில்லை. அதற்கு என்ன காரணம்? அந்த யானைக்குத் தன்னுடைய பலம் எத்தனை மகத்தானது என்றோ, தான் நினைத்தால் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுவிட முடியும் என்றோ தெரிவதில்லை. ஏனென்றால், சின்ன வயதிலிருந்தே அந்த யானையின் பாகன் அதை அப்படித்தான் பழக்கி இருக்கிறான்.  யானை சின்னக் குட்டியாக இருந்தபோது சங்கிலியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று சுதந்திர மாகத் திரியவேண்டும் என்ற ஆர்வத்தில் கடுமையாக முயன்றிருக்கும். அந்தச் சின்ன யானைக்குட்டியின் விடுதலை பெறும் முயற்சி தினமும் தோல்வியிலேயே முடிந்திருக்கும். நாளடைவில், நாம் சங்கிலியால் பிணைக் கப்பட்டிருக்கும்போது, அதிலி ருந்து விடுபடுவது என்பது நம்மால் முடியவே முடியாது என்பது அதன் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கும். அதனால்தான், குட்டி யானை, இன்று பெரிய யானையாக வளர்ந்து, அசாத்தியமான பலம் பொருந்திய மிருகமாக  மாறிவிட்டபோதிலும், அது சங்கிலிக்குக் கட்டுபடுகிறது.

அருணிமா சின்ஹா
அருணிமா சின்ஹா

இந்த உலகத்தில் கஷ்டமான காரியம் என்று எதுவுமே கிடையாது. சில காரியங்களுக்குக் குறைந்த அளவு முயற்சியிலேயே பலன் கிடைத்துவிடும். ஆனால், வேறு சில வேலைகளுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். இன்னும் சில வேலைகளுக்கு மிகவும் அதிகமாக முயற்சி தேவைப்படும்.

அருணிமா சின்ஹா என்ற 27 வயதுப் பெண்மணி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கால்பந்து மற்றும் வாலிபால் வீராங்கனை. உலகத்திலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்துக்கே சென்று அவர் கால் பதித்தார். அவரைப் பற்றி இன்னும் ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னால், ‘அட! அப்படியா?’ என்று ஆச்சரியப்படுவீர்கள். ஒரு விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த பின்னர் அவர் நிகழ்த்திய சாதனை இது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com