இந்தியக்கடலோர காவல்படை பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்?

Indian coast Guard
Indian coast GuardImg credit: AI Image
Published on

இந்தியக் கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப் பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இப்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-1 ம் தேதி இந்தியக் கடலோரக் காவல்படை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

1977-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் நாள் காவல் படை உருவாக்கப்பட்டு அதனை இந்தியக் கடலோரக் காவல் படை நாளாக கொண்டாட வேண்டுமென்று அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து1979 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரிவுகள்:

கடலோரக் காவல் படை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் மும்பையிலும், கிழக்கு மண்டலத்தின் தலைமை இடம் சென்னையிலும், அந்தமான் & நிக்கோபார் மண்டலத்தின் தலைமையிடம் ஃபோர்ட் பிளேரிலும் மற்றும் வடமேற்கு மண்டலத்தின் தலைமையிடம் காந்தி நகரிலும் அமைந்துள்ளது. மொத்தம் 5440 பேர் இதில் பணி புரிகிறார்கள்.

இதன் முதல் தலைவர் யார் தெரியுமா? துணை அட்மிரல் வி.எ. காமத் என்பவர் ஆவார்.

இதையும் படியுங்கள்:
24 மணிநேரத்தை மனிதன் எப்படி கண்டுபிடித்தான்? Clock என்ற பெயர் எப்படி வந்தது? அறிவோமா?
Indian coast Guard

கடலோரகாவல் படை பணிகள் கடல் வளங்களை பாதுகாப்பது, கப்பல்களை பாதுகாப்பது, கடல் வழி குடியேற்றத்தை கண்காணிப்பது, கடல் வழி போதைப் பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும்.

கடலோர காவல் படை ஆனது இந்திய கடற்படை மீன்வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை காவல்துறை போன்றவற்றுடன் சேர்ந்து தன் பணியை செய்கிறது.

சர்வதேச எல்லைகளில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் போர் சாதனங்களை பராமரிப்பது போன்ற பணிகளை கடற்படை செய்து வருகிறது.

செயல்பாட்டு நிலையங்கள்:

இந்திய கடலோர காவல் படைக்கு மொத்தம் 42 நிலையங்கள் உள்ளன.

இந்திய கடலோர காவல் படை நாளில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் விழாக்களை நடத்துகிறது. அவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் அணிவகுப்புகள் மற்றும் கண்காட்சிகள் கடலோர காவல் படை வீரர்களின் சாதனைகள்/வீரத்தை அங்கீகரிக்கும் விருது விழாக்கள், தொடர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

காவல் படை ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள், என அனைவரும் சேர்ந்து விழாக்களை கொண்டாடுகின்றனர்.

இந்திய காவல் படை வீரர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவிப்போம்!

அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com