24 மணிநேரத்தை மனிதன் எப்படி கண்டுபிடித்தான்? Clock என்ற பெயர் எப்படி வந்தது? அறிவோமா?

The Evolution of the Clock
The Evolution of the ClockImg credit: AI Image
Published on
  • சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தைக் கொண்டு நேரத்தை கணித்த பண்டைய காலத்தில் இருந்து தொடங்கி,

  • நீர் மற்றும் மணல் கடிகாரங்கள் வழியாக 13ம் நூற்றாண்டில் எடையால் இயங்கும் முதல் இயந்திர கடிகாரங்கள் உருவாகி,

  • 17 ஆம் நூற்றாண்டில் ஊசல் கடிகாரத்தின் கண்டுபிடிப்புடன் துல்லியம் அதிகரித்து,

  • இறுதியில் நவீன மின்னணு கடிகாரங்கள் வரை தற்போது வளர்ந்து உள்ளது.

கடிகாரம் என்பது இயற்கையின் இயக்கத்தை அளவிட மனிதன் உருவாக்கிய ஒரு கருவி.

இது ஆரம்பத்தில் சூரியனை அடிப்படையாகக் கொண்டு பின் நீர், மணல், எடைகள், ஊசல்கள், ஸ்பிரிங்குகள் மற்றும் இறுதியாக மின்சாரம் குவார்ட்ஸ் படிகங்கள் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்றைய துல்லியமான கடிகாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஊசல் கடிகாரம்:

1656-ல் டச்சுக்காரர் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் ஊசலைப் பயன்படுத்தி துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். இது ஒரு நாளை 24 மணி நேரமாக பிரித்தது.

முதன் முதலில் கடிகாரத்திற்கு 'Clocca' என்றுதான் லத்தீன் மொழியில் பெயர் வைக்கப்பட்டது.

அதன் அர்த்தம் 'The bell'. காலப்போக்கில் அது Clock-ஆக மாறியது. ஆங்கிலத்தில் '2' 0 கிளாக், '3 'clock என்று கூறுவதற்கு அர்த்தம் இருந்தது.

80-ம் நூற்றாண்டில் மணிக்கூண்டுகள் மிகவும் பெரிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: குருவிக்கு கடன் பட்ட காகம்!
The Evolution of the Clock

அதனை பராமரிக்க டைம் கீப்பரிடம் மணி கேட்கும் போது அவர்கள் 1 of the Clock , என்று கூறுவார்களாம். அதுதான் காலப்போக்கில் 2 '0' Clock என்று ஆகிவிட்டது.

வரலாற்றில் பலவிதமான நேரம் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உலகிற்கு சுமேரியன்ஸ் தான் முதலில் நேரத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். முதல்முறையாக அவர்கள் சூரிய வெளிச்சத்தில் விழும் நிழலை பார்த்து தான் நேரத்தை கணித்துள்ளனர்.

அதைப் பார்த்து எகிப்தியர்களும் பின்பற்ற தொடங்கினார்கள். ஆனால், அந்த கடிகாரத்தை பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இரவு நேரத்தில் நேரம் தெரியாமல் இருந்தது.

இதனால் கிரேக்கர்கள் தண்ணீர் கடிகாரத்தை உருவாக்கினார்கள். அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் நிரம்பி ஒரு சின்ன பெட்டியில் இருந்து காலப் பெட்டி வரை ஒரு காப்பர் குழாயை இணைத்து அதன் மூலமாக நீரை சொட்டு சொட்டாக வடிய வைத்து இரவு பகல் நேரத்தைக் கணித்தனர்.

கடிகாரத்தில் 12 எண்கள் இருப்பது நம் கைவிரல்களை வைத்துதான்; கட்டை விரல்களை வைத்துத்தான். நமது கட்டை விரல்களை மட்டும் விடுத்து மீதமுள்ள 8 விரல்களின் மூன்று மடக்கு விரல்களை கணக்கில் வைத்து 8 x 3 = 24 என்று ஒரு நாளுக்கு 24 மணி நேரத்தை கணக்கிட்டு கிரேக்கர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின் இயற்கையை நம்பி நேரத்தை கணிப்பது சிரமமாக இருந்தது. 1505 -ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹென் லெயின் என்பவர்தான் முதன் முதலில் நேரத்தை பார்க்கும் இயந்திரத்தை உருவாக்கினார்.

அதுவும் துல்லியமாக இல்லை. அதன் பின் 1600 -ம் வருடத்தில் Jost Burgi என்னும் பொறியாளர் நிமிடங்கள் மற்றும் நொடிகள் வைத்து சரியாக ஒரு கடிகாரத்தை உருவாக்கினார்.

மணிக்கூண்டுகளைக் கட்டி கடிகாரங்களை அமைத்த பின்பும் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால், நேரத்தை கணிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
‘பஞ்சவர்ண குரங்கு’கள் பற்றி அறிவோமா குட்டீஸ்?
The Evolution of the Clock

இதனால், 1901 ஆம் வருடத்தில் பேட்டரிகள் மூலம் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கினார். ஆனால், அந்த பேட்டரி மிகவும் பெரிதாக இருந்தது. அதனை எடுத்து வருவதற்கு 20 நபர்கள் தேவைப்பட்டனர்.

இது மட்டும் இன்றி, 16ஆம் நூற்றாண்டில் லத்தீன் மக்கள் பகலை கணிப்பதற்கு (Ante Meridien of the Clock) என்றும், மெரிடியன் ஆஃப் தி கிளாக் என்றும், இரவை கணிப்பதற்கு போஸ்ட் மெரிடியன் ஆஃப் தி கிளாக் (Post Meridian of the Clock) என்றும் பிரித்தனர்.

இதுவே காலப்போக்கில் AM, PM என்று ஆனது.

1920 -ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் John Harwood என்ற நபர் மணி, நேரம் எங்கு சென்றாலும் தெரிய வேண்டும். அதனை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதன் படி அவர் கைக்கடிகாரத்தை வடிவமைத்தார்.

இவ்வாறு தோன்றிய கடிகாரங்கள் தான் இன்று நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. தேர்வுக்கு தொடங்கி சுப காரியங்கள் வரை நேரம் பார்க்க மிக முக்கியமானதாக கடிகாரம் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com