குழந்தைகள் அதிகம் விரும்பும் மாச்சில்லு பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்

பிஸ்கட் ...
பிஸ்கட் ...

லகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும்  பிஸ்கட். பிஸ்கட் என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து உருவானது. இதற்கு "இரண்டு முறை சுடப்பட்டது" என்று பொருள். பிஸ்கட்கள் முதன் முதலில் கிமு 3ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இவை பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் உருவாக்கப்படுகின்றன.

பிஸ்கட் (மாச்சில்லு) தோன்றிய வரலாறு:

நீண்ட பயணங்களின்போது குறிப்பாக கடற் பயணங்களின்போது சத்தான எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய, இலகுவாக சேமித்து வைக்கக்கூடிய, நீண்ட நாட்கள் பழுதடையாமல் இருக்கும் உணவு பண்டங்களுக்கான தேவை எழுந்தது. இதனால் மாவினை சுடுவதன் மூலம் பிஸ்கட் என்ற உணவு பண்டம் தயாரிக்கப்பட்டது. எகிப்திய மாலுமிகளும்,ரோமர்களும் பயணங்களின் போது பிஸ்கட்களை பயன் படுத்தினார்கள்.

இன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் பெரும்பாலும் காரச்சுவை மற்றும் இனிப்பு சுவையுடையதாக தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பிஸ்கட்டுகள் தட்டையாக தயாரிக்கப்படுகின்றன.

பிஸ்கட்கள் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிக புரத சத்துக்களை கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால் கொழுப்பு சத்தத்தின் அளவு அதிகம் இருக்கிறது என்று அர்த்தம்.

பிற நாடுகளில் குக்கீ மற்றும் பிஸ்கட் ஆகிய இரு பெயர்களும் வேறுபட்ட அர்த்தங்களை கொண்டிருந்தாலும் பல நாடுகளிலும் இரண்டு பெயர்களுமே பயன்படுத்தப்படுகின்றன.

பிஸ்கட்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

பிஸ்கட்டுகளில் முதன்முறையாக சர்க்கரையை சேர்த்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். பிஸ்கட்டுகளின் இடையில் உலர் பழங்கள் சேர்க்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் உணவு எடுத்துக் கொண்ட பின் நறுமணம் மிக்க பிஸ்கட்களை சாப்பிட்டு வந்தனர். ஆங்கிலேயர்கள் செய்த பிஸ்கட்களில் சோம்பு சேர்க்கப்பட்டது. இந்த பிஸ்கட்டுகள் வாய் துர்நாற்றத்தை போக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு சில இடங்களில் நடக்கும் இறுதிச் சடங்குகளில் இறந்தவர்களுக்கு அருகே பிஸ்கட்டுகள் வைக்கப்பட்டன. சடங்குகளில் கலந்து கொள்ளும் மக்கள் அந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டால் இறந்தவரின் பாவம் நீங்குவதாக கூறப்பட்டது. ராணி விக்டோரியாவின் பெயரை ஹண்ட்லி & பாமர்ஸ் நிறுவனம் பிஸ்கட்டிற்கு வைக்க அரசியிடம் அனுமதி கேட்டது. இதை அவ மரியாதையாகக் கருதிய ராணி மறுத்துவிட அவர் வாழ்ந்த அரண்மணையின் பெயரைக் கொண்ட "ஆஸ்போர்ன்"என்ற பிஸ்கட்கள் 19ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
இந்திய மணப்பெண்களின் 4 தனித்துவமிக்க ரவிக்கை வடிவமைப்புகள்!
பிஸ்கட் ...

பிஸ்கட்டுகள் பல நாடுகளில் பிரதானமாக உள்ளது. இனிப்பு பிஸ்கட், உப்பு பிஸ்கட் முதல் க்ரீம் பிஸ்கட் வரை விதவிதமான பிஸ்கட்கள் உள்ளன. தேநீர் நேரத்தில் தேநீருடன் பரிமாறப்படும் பிஸ்கட் தேநீரின்சுவையை கூட்டுகின்றன.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏழைகள் பணக்காரர்கள் என அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது பிஸ்கட்.

இந்தியா பாரம்பரிய பிஸ்கட்களின் செழுமையான தன்மையை கொண்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் அதன் தனித்துவமான சுவைகளுடன் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஏலக்காய் கலந்த பிஸ்கட், க்ரன்ச்சி பிஸ்கட் என விதவிதமான பிளேவர்களில் மணத்துடன் வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com