‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

லுக்கிசம் - வெப்டூன்...
லுக்கிசம் - வெப்டூன்...

-ஆர். பாவனா

லுக்கிசம் ஒரு பிரபலமான கொரியன் வெப்டூன். இது குழந்தைகளுக்கு பல நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்கிறது.

டேனியல் பார்க் என்ற உயர்நிலை பள்ளி மாணவன். குள்ளமான மற்றும் பருமனான உடல்வாகு கொண்டவன். தனது அழகற்ற தோற்றத்தின் காரணமாக மற்ற மாணவர்களால் கேலி, கிண்டல் செய்யப்படுகிறான். மனதளவில் காயப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது என்று எல்லா வகையான அவமானங்களையும் தினமும் அனுபவிக்கிறான். அதனால் அவனை புதிய பள்ளியில் சேர்க்கிறார் அம்மா.

ஒரு நாள் அவனது வாழ்வில் ஓர் அதிசயம் நிகழ்கிறது. அவன் தூங்கி எழுந்து பார்க்கும்போது அவனது தோற்றம் மாறியிருப்பதைக் கவனிக்கிறான். அந்தப் புதிய உருவம் ஒல்லியாக, உயரமாக, வாட்டசாட்டமாக, அழகாக இருக்கிறது. அந்தத் தோற்றத்துடன் பள்ளிக்கு செல்லும்போது அவனை யாரும் கேலி செய்யவில்லை. எல்லோருக்கும் அவனைப் பிடித்து இருக்கிறது. இரவு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய பழைய உருவம் அவனுக்கு வந்துவிடுகிறது. அதோடு அவன் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைக்குச் செல்கிறான்.

அவனது புதிய பள்ளியிலும் குள்ளமான மற்றும் பருமனான உடல்வாகு கொண்ட மற்ற மாணவர்கள் அனைவரும் பிறரால் கேலி செய்யப்படுகிறார்கள். துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அவனுடைய அழகான புதிய உருவத்தினால் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். முன்பு அவனைப் புறக்கணித்தவர்கள் மற்றும் கொடுமைப்படுத்தியவர்கள் எல்லாம் இப்போது அவனிடம் மிகவும் பிரியமாக நடந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு டேனியல் தனது இரட்டை வாழ்க்கை நடத்தும்போது தன்னைச் சுற்றி உள்ள மக்களின் உண்மையான நிறங்களைக் காணத் தொடங்குகிறான். புதிய நண்பர்கள் அவனது அழகான தோற்றத்தின் காரணமாகவே அவனுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்கிறான்.

இதையும் படியுங்கள்:
மேக்கப் பிரஷ்கள்…பராமரிக்கும் வழிமுறைகள்!
லுக்கிசம் - வெப்டூன்...

இந்த இரண்டு விதமான உருவங்களுக்கு இடையில் மாறி மாறி செல்லும்போது மனித உறவுகளின் சிக்கலான தன்மையையும் சமூகத்தில் உடல் தோற்றம் ஏற்படுத்தும் விளைவுகளையும் கண்டுகொள்கிறான். இறுதியில் வெளித்தோற்றம் அழகாக இருந்தால் மட்டும் ஒரு மனிதனால் மகிழ்ச்சியாக அல்லது திருப்திகரமான வாழ்க்கை வாழமுடியாது என்பதை உணர்ந்து கொள்கிறான். கருணை, இரக்கம், பச்சாதாபம், ஒருமைப்பாடு போன்ற குணங்கள்தான் மிகவும் முக்கியம் என்று அறிந்துகொள்கிறான்.

லுக்கிசம் - வெப்டூன்  குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

லுக்கிசம் - வெப்டூன் ....
லுக்கிசம் - வெப்டூன் ....

1. உருவ கேலி கூடாது:

எந்த மனிதரையும் அவரது உருவத்தைப் பார்த்து எடை போடவோ, கேலி செய்யவோ கூடாது. அவர்களின் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் நல்ல குணங்களை மதிக்க வேண்டும்.

2. மனதில் வலிமை;

இந்தக் கதை முழுவதும் கதையின் நாயகன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய மாற்றத்திற்கு உள்ளாகிறான். அதுபோலவே தங்கள் வாழ்வில் துன்பம் நேரும்போது குழந்தைகளும் சவால்களை வென்று மனதில் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

3. நட்பின் மதிப்பு:

நண்பர்களுடைய முக்கியத்துவத்தையும் நட்பின் அவசியத்தையும் எடுத்து சொல்லுகிறது.

4. சுய நேசிப்பு:

மனிதன், தனது உருவம் எப்படி இருந்தாலும் அதை வெறுக்கக்கூடாது. தன் உடலை அவன் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com