ஹேய் குட்டீஸ்! பள்ளிக்கூடத்தில் மட்டும் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்களா? இல்லை! நாம் தினமும் பார்க்கும் கார்ட்டூன்களும், அதில் வரும் நண்பர்களும் கூட நமக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் தினத்தில், கார்ட்டூன் உலக நண்பர்கள் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாமா?
சோட்டா பீம் நமக்கு நல்ல நண்பனாகவும், துணிச்சலாகவும் இருக்க கற்றுக்கொடுக்கிறான்.
நண்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது உதவ வேண்டும் என்பதையும் அநீதிக்கு எதிராக துணிச்சலுடன் நிற்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுக்கிறான்.
டோராவின் பயணங்கள், குழந்தைகளுக்குக் குழுவாகச் சேர்ந்து சவால்களை எப்படித் தீர்ப்பது என்று கற்றுக்கொடுக்கிறது. புதிய இடங்களைக் கண்டறியவும், உலகத்தைப் பற்றிய தகவல்ளை அறியவும் இவள் உதவுகிறாள்.
குறும்புகளால் ஷின்சான் நம்மை சிரிக்க வைத்தாலும், தன் குடும்பத்தின் மீதான பாசத்தையும், மகிழ்ச்சியையும் எப்படி வெளிப்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறான்.
இயற்கையின் அழகையும், நல்ல நண்பர்களைப் பெறுவதையும், எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழ்வதையும் கற்றுக்கொடுக்கிறாள் ஹைடி.
நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக பழகவும் அவள் சொல்லித்தருகிறாள்.
ஜாக்கி சான் சாகசங்கள் கார்ட்டூன், தைரியம், குழுவாகச் செயல்படுதல் மற்றும் குடும்பத்தின் அன்பைப் பாதுகாப்பது எப்படி என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறது.
நட்பின் மதிப்பையும், பனிவாக நடந்துகொள்வதையும் டோரேமான் கற்றுக்கொடுக்கிறான். நாம் எவ்வளவு குறைகளை உடையவராக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறான்.
உண்மையான நட்பு இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் ஒன்றாகச் சேர்ந்து தீர்க்கலாம் என்று மோட்டுவும் பட்லுவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது எப்படி என்று டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
குட்டீஸ், கார்ட்டூன் பார்ப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அந்த வேடிக்கை உலகத்தில் இருக்கும் நண்பர்கள், நம் ஆசிரியர்களைப் போலவே நமக்கு முக்கியமான பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இந்த ஆசிரியர் தினத்தில், நமக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தரும் அனைத்துக் கார்ட்டூன் நண்பர்களுக்கும் ஒரு நன்றி சொல்லலாமா?