1) மனித கண்களால் 10 மில்லியன் வண்ணங்களை அறிய முடியுமாம்.
2) மனித உடலில் 2.5 மில்லியன் வியர்வைத் துளைகள் உள்ளன.
3) விமான பயணத்தின்போது ஒருவரின் வாசனை மற்றும் சுவை உணர்வு குறையும்.
4) நம்மால் உறிஞ்சி கொண்டே பேசமுடியாது. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடியும்.
5) நாம் தும்மும்போது நமது இதயம் ஒரு மில்லி செகண்ட் நேரம் நிற்கும்.
6) மனிதன் இறக்கும்போது கடைசியாக இறப்பது காது கேட்கும் திறன் தானாம்.
7) ஜப்பானில் வளைந்த பற்கள் இருப்பவர்கள் அழகானவர்களாம்.
8) கைகளை எவ்வளவுதான் அசைக்க முடிந்தாலும் நம்மால் முழங்கையை மட்டும் நாக்கால் தொடமுடியாது.
9) இசை என்றால் பயம் என்பதற்கு மேலோஃபோபியா என்று பெயர்.
10) தூய நீருக்கு சுவையோ மணமோ கிடையாது என்பது தெரியுமா. உலகில் உள்ள நல்ல நீரில் 90% அண்டார்டிகாவில்தான் உள்ளது.
11) நம்மால் ஒரே நேரத்தில் கனவு காணவும் குறட்டை விடவும் முடியாது.
12) மனிதனின் எச்சில் சிறந்த வலி நிவாரணியாம்.
13) நீர்யானைகள் கோபப்பட்டால் அதன் வேர்வை சிகப்பாகும்.
14) கங்காருவால் பின்னோக்கி நடக்க முடியாது.
15) உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வவ்வால் இனமாம்.
16) டால்ஃபின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டுதான் தூங்குமாம்.
17) நூறுமுறை சிரிப்பது 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு சமமாம்.