ஹெமிங்வே பூனைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா?

hemingway cats
hemingway cats

ஹெமிங்வே என்பவர் புகழ் பெற்ற ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவருடைய ‘’கிழவனும் கடலும்’’ நாவலுக்காக புலிட்சர் விருது பெற்றவர். அவருக்கும் பூனைகளுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஹெமிங்வே பூனைகள் என்று அவர் பெயரால் சில பூனைகள் அழைக்கப்படுகின்றன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஹெமிங்வே பூனைகள் என்பது மரபணு மாற்றத்தைக் கொண்ட பூனைகளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். பொதுவாக, பூனைகளின் முன் பாதங்களில் ஐந்து கால் விரல்களும், பின் பாதங்களில் நான்கு விரல்களும் இருக்கும். ஆனால் சில ​பூனைகளுக்கு ஒவ்வொரு பாதத்திலும் எட்டு கால்விரல்கள் வரை இருக்கும். இது போல வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமான கால்விரல்களுடன் பிறக்கும் பூனைகளுக்கு பாலிடாக்டைல் பூனைகள் என்று பெயர்.

கப்பல் மாலுமிகள் பாலிடாக்டைல் பூனைகளை வீட்டில் வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டமானது என்று கூறுவார்கள். அதனால் ஹெமிங்வேவிற்கு அந்த மாதிரி ஒரு பூனையை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.

ஹெமிங்வே...
ஹெமிங்வே...

ஸ்டான்லி டெக்ஸ்டர் என்கிற ஒரு உள்ளூர் மாலுமி ஒருவர் ஹெம்மிங்வேயின் பூனை ஆசையைப் பற்றி கேள்விப்பட்டு ஆறு விரல்கள் கொண்ட ஒரு பூனைக் குட்டியை பரிசாகாக் கொடுத்தார். ஹெமிங்வே அதற்கு ஸ்நோ வைட் என்று பெயரிட்டு தன் வீட்டில் வளர்த்து வந்தார்.அது பல்கிப் பெருகி ஹெம்மிங்வேயின் கீ வேஸ்ட் மற்றும் கியூபாவில் உள்ள அவரது வீடுகளில் 150-க்கும் மேற்பட்ட பாலிடாக்டைல் பூனைகள் வளர்ந்து வந்தன தற்போது அவரது வீடு அருங்காட்சியகமாக மாறி உள்ளது. அதில் 56 பூனைகள் இருக்கின்றன.

பாலிடாக்டைல் ​​பூனைகளின் சிறப்புகள்:

1. இவை அதிர்ஷ்டப் பிராணிகள் என்று கருதப்பட்டதால் பொதுமக்களின் கருத்தைக் கவர்ந்தன. அமெரிக்கக் கலை, இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

2. கூடுதல் கால்விரல்கள் உள்ளதால் இந்த பூனைகளால் சுலபமாக மரம்  ஏறுதல் மற்றும் வேட்டையாடுவதில் சிறப்பாக செயல்பட முடிகிறது.

3. பாலிடாக்டைல் ​​பூனைகளுக்கு பொதுவாக மற்ற பூனைகளை விட வித்தியாசமான கவனிப்பு தேவையில்லை என்றாலும், அவற்றின் நகங்கள் மற்றும் கால்விரல்களுக்கு கவனம் தேவைப்படலாம். அதிக கால்விரல்கள் நகங்கள் அசாதாரண வடிவங்கள் அல்லது கோணங்களில் வளரக்கூடும் எஎன்பதால் அசௌகரியத்தைத் தடுக்க அடிக்கடி டிரிம் செய்ய வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த சம்மர் சீசனில் ஜில்லுனு ஜூஸ் குடிக்கலாமா?
hemingway cats

4. ஹெமிங்வே பூனைகள் பெரும்பாலும் அவற்றின் நட்பு மற்றும் நேசமான இயல்புக்காக மக்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. இது மனிதர்களுடனான தொடர்பு மற்றும் வளர்ப்பின் விளைவாக அவை மக்களுடன் நன்றாக பழகுகின்றன.

ஹெமிங்வே பூனைகள் தோற்றத்தில் தனித்துவமானவை மட்டுமல்ல, ஒரு வளமான வரலாற்று விவரிப்பையும் கொண்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com