குட்டி போடும் ஆண் உயிரினங்கள்!

male fish give birth
male fish give birth
Published on
gokulam strip
gokulam strip

இந்த உலகில் உள்ள எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் குழந்தைப்பேறு என்பது பெண் இனத்திற்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இருப்பினும் அதற்கும் விதிவிலக்காக சில உயிரினங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த அதிசய உயிரினங்களில் ஆண் தான் இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த உயிரினங்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

Seahorses

இந்த கடல்வாழ் உயிரினங்களில் பெண், இளம் ஆண் இனத்தின் வயிற்றில் முட்டை இட, ஆண் இனம் அந்த முட்டையை குட்டியாக ஆகும் வரை பாதுகாக்கிறது. இந்த முட்டை நன்கு பாதுகாக்கப்பட்டு தண்ணீரில் பிரசவமாகிறது. இது இயற்கைக்கு மாறாக நடக்கும் அதிசயமாகும்.

Sea dragons

கடல் குதிரையைப் போன்ற தோற்றமுடைய இது, அவற்றைப் போல் வயிற்றில் அல்லாமல் வாலில் முட்டையை அடைகாத்து குட்டி போடுகிறது!

Pipie fish

இதிலும் ஆணினமே குட்டி போடுகிறது. இது முட்டைகளை தன்னுடைய உடலுக்கு வெளியே இருக்கும் பை போன்றவற்றில் அடைகாக்கிறது. அது குட்டியாக வெளியே வரும் வரை அடைகாக்கிறது.

Dusky pipefish

இது பைப்ஃபிஷ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் உடலிலும் பை போன்ற அமைப்பு உள்ளது. இது ஆக்சிஜன் அளவைக் கட்டுப்படுத்தி குட்டியை வெளியே வரும் வரை பாதுகாக்கிறது. ஆண் உயிரின இனப்பெருக்கத்திற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

Ribbon pipefish

இதுவும் பைப்ஃபிஷ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆண் உயிரினமே இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடுகிறது.

Gulf pipefish

இந்த உயிரினத்திலும் ஆண் இனமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. இதன் உடலில் உள்ள பை போன்ற அமைப்பு ப்ளசென்டா போல் செயல்படுகிறது. இது முட்டையை அடைகாத்து, ஊட்டச் சத்துக்கள் அளித்து, குட்டி போடுகிறது.

இதையும் படியுங்கள்:
வாய் வழியாக குட்டி போடும் உயிரினம் எது தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
male fish give birth

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com