குறைந்த வெளிச்சத்தில் படித்தால் கண்கள் எளிதில் களைப் படையும் கண்வலி, தலைவலி வரும். படிக்கும்போது உங்களுக்கு பின்புறமிருந்து வெளிச்சம் வரும்படி குறிப்பாக இடதுபுறம் இருந்து வருவது நல்லது.
ஒடும் பஸ், ரயில் போன்ற வண்டிகளில் பயணம் செய்யும் போது படிப்பதும் சரியல்ல. கண்கள் எளிதில் களைப் படையும். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பது கவனத்தை சிதறடிக்கும். சாப்பிட்டுக்கொண்டே புத்தகம் படித்தால் புறையேறும். டாய்லெட்டில் படித்தால் நோய் வர வாய்ப் புண்டு. படியில் அல்லது மாடியில் நடந்து கொண்டே படித்தால் இடறிவிழ வாய்ப்புண்டு. கண்களுக்கும் இது சோர்வைத் தரும். பாட்டு கேட்டுகொண்டே படித்தாலும் கவனம் சிதற வாய்ப்புண்டு.
பள்ளியில் ஒரு மணி நேரம் பாடம் நடத்தி ஆசிரியர் சென்றதும் ஒரு நிமிடதில் அவர் நடத்திய பாடத்தைத் திருப்பிப் பார்த்தால் மனதில் பதியும் என்பது அறிவியல் உண்மை
பொதுவாகப் பாடம் படிக்க அனைவருக்கும் உகந்த நேரம் காலை 4 மணி முதல் 7 மணிவரை மற்றும் மாலை 6 முதல் 10 வரை மட்டுமே! அதற்குமேல் படிக்கும்போது உள்வாங்கும் திறன் குறையும்.
இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பது எவ்வுளவு பெரிய உண்மை!
படுத்துக்கொண்டே படிக்கக் கூடாது.
பொதுவாகவே படுத்துக்கொண்டு படிப்பது சரியல்ல என்றாலும் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் மற்றும் கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இதை அறவே தவிர்க்க வேண்டும். கண்களுக்குள் நீர் அழுத்தம் அதிகமாகி, ‘கிளாகோமா’ என்ற நோய் வர இது காரணமாகி விடும். வெளிச்சத்தைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வண்ணங்கள் இருப்பதுபோலத் தென் பட்டால் அது இந்த வியாதியின் அறிகுறி. ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பார்வை இழப்புகூட நேரிடலாம்.
கழுத்து வலி, முதுகுவலி போன்றனவும் படுத்துக் கொண்டே படிப்பதால் ஏற்படும். நீண்ட நேரம் டீவி பார்ப்பதால் கண்கள் வறண்டுபோக வாய்ப்புண்டு. 15 நிமிடத்துக்கொரு முறை 2 நிமிடம் கண்களை மூடிப் பின் திறப்பதே இதற்குத் தீர்வு.