ஆசிரியரைத் திணற வைத்த மாணவன்!

கணித மேதை இராமானுஜம்
கணித மேதை இராமானுஜம்

-நித்தீஷ்குமார் யாழி

குப்பறை எப்போதும் மாணவர்களால் கலகலப்பாக இருக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் விளையாடுவர், சிலர் ஆடுவர்,  சிலர் பாடுவர், சிலர் கதை பேசி கொண்டிருப்பர். சிலர் குறும்புத்தனம் செய்து திட்டு வாங்கிக்கொள்ளுவர்.

ஆனால், ஒரு மாணவன் தன் வகுப்பறைக்கு வருவான். தன் புத்தகங்களை உரிய இடத்தில் வைப்பான்.  பின்னர் பள்ளியில் இருக்கும் தனிமையான இடம் ஒன்றுக்குச் செல்லுவான். அங்கே அமர்ந்துகொள்வான். எதைப்பற்றியோ சிந்தித்துக்கொண்டிருப்பான். அவனுக்கு நண்பர்களே கிடையாது. யாருடனும் பேசி பழக மாட்டான். எப்போதும் ஏதோ யோசனையாகத்தான் இருப்பான். யாரும் அவனிடம் வந்து பேசமாட்டார்கள்.

அவன் எப்போதாவது வகுப்பறையில் தன்னருகில் உட்கார்ந்திருப்பவனிடம் திடீரென்று  எதையோ கேட்பான்.

கணித மேதை இராமானுஜம்
கணித மேதை இராமானுஜம்

அவன் கேள்வியே அவர்களுக்குப் புரியாது. எட்டாம் வகுப்பில் அவன் படித்துக்கொண்டிருக்கும்போதே, பட்டப் படிப்புக்குரிய கணக்குப் புத்தகத்தை எடுத்துவந்து அதில் போராடி வெற்றி கண்டுவிடுவான் அவன்.

ஒரு முறை கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தது. கணித ஆசிரியர் கரும்பலகையில் கணக்குகளை எழுதி அவற்றுக்கான விளக்கத்தைத் தர முயன்று கொண்டிருந்தார். பாடத்தின் இடையில், ஆசிரியர் கூறினார்.

‘எந்த எண்ணினையும், அதே எண்ணினால் வகுத்தால், கிடைக்கும் விடையானது ஒன்று என்றே அமையும்.’ அவர் சொல்லி முடித்தவுடன் அந்த மாணவன் அமைதியாக எழுந்துநின்று ஆசிரியரிடம் கேட்டான், ‘அப்படி என்றால், ஜீரோவை, ஜீரோவால் வகுத்தால் கிடைக்கும் விடையும் ஒன்றாக இருக்குமா ஸார்?’

ஆசிரியர் திணறிப்போனார்.

அந்த மாணவன்தான் பின்னாளில், ‘கணித மேதை இராமானுஜம்’ என்று போற்றிப் புகழப்பட்டான்.

சீனிவாச இராமானுஜன் 1887ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் நாள் ஈரோட்டில், சீனிவாச அய்யங்கார் கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தவர். 33 ஆண்டுகளே வாழ்ந்தபோதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.

இவர் தனது இறுதிகாலதில் படுத்த படுக்கையாக இருந்தபோது தனது நண்பருக்கு நூறு பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதினார்.  இராமானுஜர் மறைவிற்கு பின் அவர் மனைவி  அந்த கடிதத்தை ஹார்டிக்கு என்பவருக்கு அனுப்பி வைத்தார். ஹார்டியும் ஒரு கணித ஆராய்ச்சியாளர் ஆவார். ஆனால், அவருக்கு இராமானுஜர் எழுதிய கடித்தில் 600 மேற்பட்ட புதிய கணித சூத்திரங்கள் எழுதியிருப்பது தெரியவந்தது. ஹார்டிக்கு அந்த கடிதத்தில் இருந்த எந்த சூத்திரமும் புரியவில்லை. அவர் அதை நெடு நாட்களாக ஆய்வு செய்துவிட்டு பின்பு அதை ஒரு நூலகத்தில் வைத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
முதுகு வலி - காரணமும்; நிவாரண யோசனைகளும்!
கணித மேதை இராமானுஜம்

இராமானுஜர் இறந்து கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கபட்ட பிளாக் ஹோல் ( Black hole ) தியாரிக்கு  ராமானுஜன் அவர்கள் எழுதிய mock modular என்ற சூத்திரம் மிகவும் உதவியதாக ஸ்டீஃபென ஹாக்கின்ஸ் கூறினார்.

மேலும், இராமானுஜர் எழுதிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூத்திரம் புரியாமல் உலகில் பல ஆராய்ச்சியாளர் அதனை இன்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவை எல்லாவற்றையும் தெளிவாக கண்டு அறிந்தால் இந்த உலகில் விடை தெரியாமல் இருக்கும் பல புதிர்களுக்கு பதில் கிடைக்கும் என்று எல்லோரும் அந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com