முதுகு வலி - காரணமும்; நிவாரண யோசனைகளும்!

Back pain - causes; Relief ideas
Back pain - causes; Relief ideashttps://www.onlymyhealth.com

முன்பெல்லாம் வயதானவர்கள்தான் முதுகு வலி, கால் வலி என்று சொல்வார்கள். ஆனால். இப்போது இளைஞர்கள் கூட முதுகு வலி என்று கூறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் நீண்ட நேரம் ஒரே பொசிஷனில் லேப்டாப், டிவி முன் உட்கார்ந்து கொண்டிருப்பது, நிற்பது, கனமான பொருட்களை தூக்குவது போன்ற சில காரணங்களால்தான் முதுகு வலி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சில எளிய ஆலோசனைகளைப் பார்க்கலாம்.

1. முதுகெலும்பை அதிகம் வளைக்காமல் நிமிர்ந்த நிலையில் அமர்வது நல்லது.

2. சரியான உணவுகளை, சரியான நேரத்தில், சரியான அளவு எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, விட்டமின் D மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம்.

3. நிமிர்ந்து படுக்கும்போது முதுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுவதை தடுக்க கால்களை சற்று உயர்த்தி வைத்து படுக்கலாம்.

4. முதுகு வலி வராமல் இருக்க படுக்கும்போது முழங்கால்களுக்கு கீழ் ஒரு தலையணையை வைத்துப் படுக்கலாம்.

5. நம் உடலை வலுப்படுத்த சில எளிய பயிற்சிகளையும், சுவாச பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். சில உடற்பயிற்சி அல்லது ஸ்ட்ரெச்சஸ் செய்ய முதுகு வலி குறையும்.

6. படுக்கைக்கு சென்ற பிறகும் லேப்டாப் மற்றும் செல்லை வைத்துக் கொண்டு கோணல்மானலாக  முதுகை வளைத்துக் கொண்டு படுப்பதைத் தவிர்க்கலாம்.

7. மென்மையான மெத்தைகளை தவிர்த்து ஒரு பாயை விரித்து நிமிர்ந்த நிலையில் படுக்க வலி நன்கு குறையும்.

8. படுக்கையில் இருந்து அப்படியே எழுந்திருக்காமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்திற்கு வந்து கால்களை தரையில் ஊன்றி எழுந்து உட்காரவும். கனமான பொருட்களை தூக்கும்போதோ எடுக்கும்போதோ முதுகை வளைக்காமல் முழங்கால்களை வளைத்து எடுக்கவும்.

9. கனமான பொருட்களை தூக்கும்போது ஒரு கையால் தூக்காமல் இரு கைகளால் தூக்கும்போது அதாவது இரு பக்கமும் ஓரளவு சம எடை இருந்தால் முதுகு தசைகளுக்கு சம அளவு வேலை கிடைக்கும். ஒரு சூட்கேஸில் மொத்தத்தையும் சேர்த்து தூக்குவதை விட, இரண்டு பேக்குகளாகப் பிரித்து இரண்டு கைகளுக்கும் வேலை கொடுக்க முதுகு வலி வராது.

10. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய நேர்ந்தால் முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து இரண்டு நிமிடம் காலாற நடந்து விட்டு வருவது முதுகு வலி வராமல் தவிர்க்க உதவும்.

முதுகு வலி தீர, சில பாட்டி வைத்தியங்கள்:

1. இரண்டு வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு சூடுபடுத்தி வலி உள்ள இடத்தில் மிதமான சூட்டில் நன்கு தேய்த்து தடவ, வலி காணாமல் போய்விடும்.

2. யூகலிப்டஸ் எண்ணெய் சில துளிகள் எடுத்து குளிக்கும் வெந்நீரில் விட்டு கலந்து குளிக்க முதுகு வலி மற்றும் உடல் வலி காணாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
துன்பம் வரும் வேளையிலே சிரிப்பது என்பது இதுதானா?
Back pain - causes; Relief ideas

3. வலிக்கும் இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

4. வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். ஐஸ் ஒத்தடம் ஒரு முறை என்றால் மறுமுறை வெந்நீர் ஒத்தடம் என மாறி மாறி கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

5. இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்து சுட வைத்து பொறுக்கும் சூட்டில் முதுகுக்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com