வினோதங்கள் நிரம்பிய கடல் அட்டைகள்!

கடல் அட்டைகள்
கடல் அட்டைகள்

டல் அட்டைகளை உயிருள்ள நிலையிலோ, அல்லது உயிரற்ற நிலையிலோ வைத்திருப்பதோ அல்லது வியாபாரம் செய்வதோ 1972ஆம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி 3-லிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனைக்குரிய குற்றம்.

கடல் அட்டைகள் எக்கினோடெர் மேடா (echinodermata) என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தன. காட்டில் வாழும் ரத்தம் உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகள் அன்னலிடா (annelida) வகையைச் சேர்ந்தவை.

கடல் அட்டைகளில் 1250க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடாப் பகுதியில்மட்டும் 32 வகைகள் உண்டு. கடல் அட்டைகள் கடலில் ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதி கள் மற்றும் உப்பங்கழிகளில் சுமார் 3 மீட்டர் ஆழம் முதல் 15 மீட்டர் ஆழம் வரை உள்ள தரைப் பரப்புக் களில் வசிக்கும்.

கடல்அட்டைகள் நீளமான உடல் அமைப்பைக் கொண்டிருக்கும். தடிம னான மேல் தோல் இருக்கும். இவற் றின் அமைப்பு வெள்ளரிக்காய் போல் இருப்பதால் ‘கடல் வெள்ளரி’ (Sea cucumber) என்றும் அழைப்பார்கள்.

இரண்டு சென்டிமீட்டர் முதல் இருந்து 2 மீட்டர் வரையிலும் வெவ் வேறு அளவுகளில நிறைய வகைக் கடல் அட்டைகள் இருக்கின்றன. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்வதற்கு இவற்றின் உட லுக்கு அடிப்புறத்தில உள்ள சிறு நீட்சிகள் வாய்ப் பக்கத்திலே இருக்கும். அந்த நீட்சிகளுக்கு டென்டகிள் என்று பெயர். இரைகளைப் பிடிக்க இது உதவும்.

கடல் அட்டைகள் கடல் தரையில் ஊர்ந்து நடமாடும். தேவைப்படும் சமயங்களில் இவற்றால் மிதக்கவும் முடியும். இவை பெரும்பாலும் கூட்டம் கூடமாகவே வாழும்.

கடல் அட்டைகள் வினோதங்கள் நிரம்பிய விலங்கினங்கள் ஆகும்.

6 மாதம் கூட ஆகாரம் எடுக்காமல் இவை உயிர் வாழும்.

தன்னுடைய  உடம்பைச் சுருக்கிச் சின்ன இடைவெளியில் கூடப் புகுந்து கொள்ள முடியும்.

கடல் அட்டைகள்
கடல் அட்டைகள்

கடல் அட்டைகளின் ரத்தம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். காரணம் இவற்றின் ரத்தத்தில ‘வெனபின்’ என்னும் மஞ்சள் நிறமி இருப்பது தான்.

‘ப்ளாங்க்டன்’, மற்றும் ‘ஃபோரா மினிஃபெரா’ போன்ற தாவரங்களை மணலோடு சேர்த்து விழுங்கிவிடும். உணவு மட்டும் செரிமானம் ஆகி மணல் வெளியே வந்துவிடும்.

சில இனங்களில் ஆண், பெண் வேறுபாடு தனித் தனியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான இனங்களில் ஆண், பெண் வேறுபாடே இருக்காது.

கடல் அட்டைகள் தங்களின் உடலில் இருந்து ஆண் மற்றும் பெண் உயிரணுக்களைக் கடலிலே கலக்கவிடும். கடல் நீரில் இந்த உயிரணுக் கள் சேர்ந்து புதிய கடல் அட்டைகள் தோன்றும்.

எதிரிகள் தாக்க வந்தால் தன்னுடைய வயிற்றில் இருந்து குடல் போன்ற பொருளைக் குதம் மூலம் வெளியே தள்ளும்.அதிலிருக்கும் ஹோலோதூரின் என்னும் விஷம் எதிரிகளை ஒடச் செய்துவிடும். ஐந்து வாரத்துக்குள்  அந்தக் குடல் தானாக மறுபடியும் வளர்ந்து வடும்.

இதையும் படியுங்கள்:
போரா குகைகள் எங்கே இருக்கு தெரியுமா?
கடல் அட்டைகள்

நண்டு, புழுக்கள், சில வகைச் சின்ன வகை மீன்கள் இவற்றின் வயிற்றில் உயிரோடு வாழும்!  அவ்வப்போது வெளியே சென்றுவிட்டு மீண்டும் கடல் அட்டைகளின் உடலில் புகுந்துகொள்ளும் அதிசயமும் நடக்கும்!

அலங்காரப் பொருளாக் கடல் அட்டைகளைத் தொட்டியில் வளர்ப் பார்கள். திசு வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இவற்றை மருந்தாகவும் உட்கொள்கிறார்கள். எலும்பு வளர்ச்சிக்கும் இது சிறந்தது. டானிக்காவும் ஜப்பானில் பயன்படுத்துகிறார்கள். சோர்வு, சிறுநீரக நோய்கள், குடல் வறட்சி போன்றவற்றுக்கு இவை  மருந்தாகும். கொழுப்பு அமிலங்கள் நிறைய  இருப்பதால் க்ரீம், லோஷன் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.

சூப் வைத்துக் குடிப்பதற்காகவும் இவை வேட்டையாடப் படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com