விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

தாமஸ் ஆல்வா எடிசன்...
தாமஸ் ஆல்வா எடிசன்...

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது அருமையான ஒரு கருத்து.

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் அதற்கு ஒரு சம்பவம் உள்ளது. தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். அவர் பல்பு கண்டுபிடித்த வரலாறு விடாமுயற்சிக்கான நல்லதொரு எடுத்துக்காட்டு.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு, அதனை அடைய உழைக்கும் வழக்கத்தினை உடையவர். அவர் பல்பு கண்டுபிடிக்கும் குறிக்கோளினைக் கொண்டிருந்தார்.

வாயு விளக்குகள் குறித்து படித்து, இருநூறு நோட்டுப் புத்தகங்களில், நாற்பதாயிரம் பக்கங்கள் குறிப்புகள் எழுதினார் எடிசன். அவரது மென்லோ பார்க் பரிசோதனைக் கூடத்தில் தரை முதல் கூரை வரை, மின்கலன்கள், இரசாயனங்கள், உபகரணங்களை நிரப்பினார். வித விதமான சுருள்களைக் கொண்டு, பல்புகளை உருவாக்க முயன்றார். கிட்டத்தட்ட 50 மக்கள் அவருடன் இந்தத் திட்டத்தில் வேலை பார்த்தனர்.

80 வகையான மூங்கில்கள் மற்றும் தென்னை நார் உட்பட 3000 வகையான தாவர நார்கள், பல்புக்கு தக்க சுருள்களா என்ற முயற்சி செய்யப்பட்டது. அந்த சுருளுக்காக ஜப்பான், இலங்கை, இந்தியா என்று உலகளாவிய  அளவில், நார்களுக்கான தேடல் நடந்தது. வெவ்வேறு தடிமனுள்ள கார்பன் சுருள்களும் முயற்சிக்கப்பட்டன.

அந்த பல்பு கண்டுபிடிக்கும் முயற்சி சென்று கொண்டிருந்தபோது, 'ஏன் நீங்கள் இந்த பல்பு கண்டுபிடிக்கும் முயிற்சியை கைவிடவில்லை ?' என்று செய்தியாளர்கள் எடிசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு எடிசன், 'நான் தோற்கவில்லை. 6000 வேலை செய்யாத முறைகளை நான் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளேன்' என்று நேர்மறையாக பதில் கூறினார்.

இதையும் படியுங்கள்:
மற்றவர் பார்வைக்கு வசீகரமாக தெரிய செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன்...

கிட்டத்தட்ட பத்தாயிரம் முயற்சிகளுக்குப் பிறகு, பல்பிற்கான சரியான கார்பன் சுருளைக் கண்டுபிடித்தார். இன்று நாம் பயன்படுத்தும் பல்புகள், எடிசனின் கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சியே. 

எடிசனின் பிரபல வாசகங்களில் ஒன்று; வாழ்க்கையின் பெரும்பாலான தோல்விகள் மக்களே! அவர்கள் யாரெனில்,  வெற்றிக்கு மிக அருகாமையில் இருந்தபோதும், அதனை உணராமல், கை விரித்தவர்கள்.

எனவே, நாமும் எடிசனைப்போல் விடாமுயற்சியை பின்பற்றுவோம். விடாமுயற்சியின் மூலம், விஸ்வரூப வெற்றியை அடைவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com