காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

காற்றின் மாசுபாடு...
காற்றின் மாசுபாடு...
gokulam strip
gokulam strip

ளிமண்டலம் பல வாயு கலவைகளை உடையதாகும். இதில் 79% நைட்ரஜன், 20% ஆக்ஸிஜன், 3% கரியமிலவாயு சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்தச் சமச்சீர் நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எவ்விதப் பாதிப்பும் அடையாது.

காற்றினால் கிடைக்கும் பயன்கள்

1. தாவரங்களின் ஒளிசேர்க்கை உணவு உற்பத்திக்கு உதவுகிறது.

2. நாம் உயிர்வாழ ஆக்ஸிஜன் தருகிறது.

3. நவீன தொடர் தொலைவின் மையமாக இருக்கிறது.

4. புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமான காற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்க காரணமாகிறது.

காற்று மாசுபாடு அடைதல்

காற்று மாசுபாடு பல்வேறு திட துகள்கள் மற்றும் வாயுக்களின் கலவையாகும். அவை காற்றில் மாசுபடுத்தும் வடிவத்தில் மனிதர்களால் வெளியிடப் படுகின்றன. இது மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.

வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு புகையாலும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளில் இருந்து வெளிவரும் உலோகத் துகள்களாலும், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிம சேர்மங்களாலும் காற்று அசுத்தப் படுகிறது. இவை மனித உடல் நலம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன.

காற்று மாசுபடுவதால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டை கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் உருவாகின்றன. தொழிற்சாலைகளும், வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியன பாதிப்படைகின்றன.

காற்று மாசுபாட்டில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வழி

1. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் பசுமையாக அமையும்போது, காற்றினால் வெளியிடப்படும் மாசின் அளவைக் குறைக்கிறது.

2. மரம் அல்லது குப்பைகளை எரிக்க வேண்டாம். இது நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். வெப்பத்தை உருவாக்கும்.

3. அதிக வாகன போக்குவரத்து பகுதிகளுக்கு அடிக்கடி செல்வது, நடைபயிற்சிக்குச் செல்வது ஆகியவற்றை தவிர்க்கவும்.

குப்பைகளை எரிக்க வேண்டாம்...
குப்பைகளை எரிக்க வேண்டாம்...

4. குறுகிய தூரப் பயணங்களுக்குக் காரை பயன் படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்குபதிலாக சைக்கிளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கும், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

5. உணவு பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது உள்நாட்டில், இயற்கையில் விளைந்த பொருட்களை வாங்குவதன் மூலமும் அதிகப்படியான எரிப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

6. நாம் வீட்டின் அறைகளில் இல்லாதபோது மின் சாதனங்களை அணைத்துவிடலாம். ஆற்றல் திறன்கொண்ட ஒளி விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
ருசித்து மகிழ விதவிதமான 3 வகையான புட்டுகள்!
காற்றின் மாசுபாடு...

7. வீட்டினுள் ஆக்ஸிஜனை அதிகமாக்கக்கூடிய அமைதி லில்லி, அக்லோனெமாஸ், மணி பிளாண்ட், அரேகாபாம், பாம்பு ஆலை, ரப்பர் ஆலை, அந்தூரியம், துளசி செடி போன்ற தாவரங்களை அழகுபட வைக்கலாம். இந்தத் தாவரங்கள் இயற்கை சுத்திகரிப்பாளராக செயல்பட்டு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன.

வீட்டின் வெளியில் கற்றாழை, ஓமவல்லி, வெற்றிலைக் கொடி, வசம்பு, மல்லிகை, முல்லை போன்ற தாவரங்களை வளர்ப்பதால் நச்சுத்தன்மை அற்ற ஆரோக்கியமான காற்று கிடைக்கிறது.

வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் மா, பலா, மாதுளை, எலுமிச்சை, வேப்பமரம், நெல்லி மரம் வைத்து வளர்ப்பதால் காற்று சுத்தமாக்கப்படும்.

இயற்கை வளங்களைத் தக்கவைப்பதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நம்முடைய தலையாய கடமையாகும்.

அனைவரும் மரங்களை வளர்ப்போம். பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கி விஷமில்லா காற்றைச் சுவாசிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com