அரியவகை காண்டாமிருகங்கள். அழிந்து வரும் சோகம்!

செப் – 22 உலக  காண்டாமிருகங்கள் தினம்!
Sep – 22 is World Rhino Day!
wild animals
Published on

காண்டா மிருகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 -ம்  தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது அசாம், மேற்கு வங்கத்தில் மட்டுமே உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில எண்ணிக்கையில் உள்ளன.

வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம் தற்போது ஆப்ரிக்கா, இந்தியா ஜாவா, சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

கருப்பு, வெள்ளை. ஒற்றைக் கொம்பு, சுமத்திரன், ஜாவா என காண்டாமிருகங்களில் 5 வகைகள் உள்ளன.

இந்தியாவில் வாழும் காண்டா மிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை ஆகும். ஆப்பிரிக்கக் காண்டா மிருகத்துக்கு  இரண்டு கொம்புகள் உண்டு.

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்து பெரிய உயிரினம் காண்டா மிருகங்கள்தான். ஆப்ரிக்காவில் வாழும் வெள்ளைக் காண்டா மிருகங்கள் 2,300 கிலோவும், இந்திய காண்டாமிருகம் 2,200 கிலோ எடை கொண்டவை. இது 6 அடி உயரம் வரை வளரும்.

காண்டா மிருகங்கள் சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழும். காண்டா மிருகத்தின் கர்ப்பகாலம் 15 முதல் 16 மாதங்கள்.

பெண் காண்டாமிருகம் 2 1/2 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும். பிறந்த குட்டி கன்று 40 முதல் 64 கிலோ வரை எடை இருக்கும்.

தாய் காண்டா மிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும். மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டா மிருகத்துக்கு உண்டு.

காண்டா மிருகம் மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மை கொண்டது.எதிரிகளை கொம்பினாமலயே தாக்கும்.

இதையும் படியுங்கள்:
தந்தங்களைக் கொண்ட அபூர்வ பாலூட்டி வால்ரஸ் பற்றிய வியப்பான தகவல்கள்!
Sep – 22 is World Rhino Day!

காண்டா மிருகத்தின் மூளை மிகவும் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது. காண்டா மிருகத்தின் கொம்பின் நீளம் 10 செ.மீ முதல் 100 செ.மீ வரை காணப்படுகிறது. இது உணவைத்தேடி அலையும் போதும், மண்ணைத் தோண்டி புல் பூண்டு, கிழங்குகளை மண்ணுக்கு அடியில் தேடவும், எதிரிகளை தாக்கவும் கொம்பு பயன்படுகிறது.

தாவர உண்ணியான காண்டா மிருகங்கள் பசுமையா இலை தழைகளை புற்களை விரும்பி உண்ணும் ஆப்பிரிக்க காண்டா மிருகத்துக்கு முன் பற்கள் கிடையாது. கடைவாய் பற்களாலேயே உணவை மென்று தின்னும்.

உலகத்தில் உள்ள  ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு அசாம் மாநிலத்தில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் மட்டுமே உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com