ஒரே சமயத்தில் தன் அலகால் பத்து மீன்களைப் பிடிக்கும் கடல் கிளிகள்!

Sea parrots that can catch ten fish at the same time!
Sea parrots
Published on

குட்டீஸ்! பச்சைக்கிளிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தினம் தினம் நாம் பார்க்கும் ஒரு அழகிய பறவையும் கூட. கடல் கிளிகளைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லையா? அப்படின்னா வாங்க கடல் கிளிகளைப் பற்றி இந்த பதிவிலே நாம கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

பஃபின்கள் (Puffins) என்றழைக்கப்படும் கடல் கிளிகள் அல்சிடே எனும் கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்தவை. கடற்கிளி ஒரு நீர் பறவையாகும். கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதிகளிலும், தீவுகளிலும் காணப்படுகின்றன. உலகம் முழுவதிலும் அட்லாண்டிக் கடல் கிளிகள் (Atlantic Puffin), ஹார்ன்டு கடல் கிளிகள் (Horned Puffin) மற்றும் டஃப்ட் கடல் கிளிகள் (Tufted Puffin) என மூன்று வகையான கடல் கிளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவை ஐஸ்லாந்து, நார்வே, கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ரஷ்யாவில் காணப்படுகின்றன. அட்லாண்டிக் வகை கடற் கிளிகள் ஐஸ்லாந்திலும் நார்வேயிலும் காணப் படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு மில்லியன் கடல் கிளிகள் கொண்டிருக்கின்றன.

கடல் கிளியின் உடலானது வலிமையானது. இதன் தலை பெரியதாகவும் அலகானது கிளியின் அலகைப் போல பெரியதாகக் காணப்படும். மேலும் இதன் அலகு முக்கோண வடிவத்திலும் ஒளிர் வண்ணமும் உடையதாகும். அலகு நிறம் மாறக் கூடிய தன்மை மிக்கது. இதன் அலகானது குளிர் காலத்தில் இளஞ்சாம்பல் நிறத்திலும் வசந்த காலத்தில் ஆரஞ்சு வண்ணத்திலும் மாற்றமடையும்.

இதையும் படியுங்கள்:
நீதிக் கதைகள்: காக்கா ஏன் கறுப்பாச்சு?
Sea parrots that can catch ten fish at the same time!

ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இக்காலத்தில் ஆண் கடற்கிளியின் அலகானது பல நிறங்கொண்டதாகக் காணப்படும். இனப்பெருக்க காலத்தில் நிலப்பகுதியை நோக்கி வந்து பாறைகளில் காணப்படும் மூன்று முதல் ஆறு அடி பொந்துகளில் பெண் பறவை முட்டை இடும். ஒரு கடல் கிளியானது ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும்.

அந்த முட்டையானது ஆறு வாரங்களில் பொரிந்து முட்டைக்குள்ளிருந்து குஞ்சு வெளிவரும். ஒரு கடல் கிளியானது ஒருமுறை ஒரு இடத்தில் முட்டையிட்டால் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதே இடத்திற்கு வந்து முட்டை இடும் என்பது ஒரு விநோதமாகும்.

தாய்ப் பறவையானது சுமார் பத்து சிறிய மீன்களை ஒரே சமயத்தில் தனது அலகால் பிடித்துக்கொண்டு வந்து குஞ்சுப் பறவைக்கு ஊட்டும். ஆண் கடல் கிளியும் பெண் கடல் கிளியும் கடலுக்குள் தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட முறைகள் டைவ் செய்து மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து தங்கள் குஞ்சுக்கு ஊட்டுகின்றன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் பறவைக் குஞ்சானது கடலை நோக்கிப் பறக்கத் துவங்கும். இவை கடலில் வாழும் மீன்களை உணவாகக் கொள்ளுகின்றன.

கடல் கிளிகளின் பிரதான உணவு மீன்களாகும். இவை ஒரே சமயத்தில் பத்து சிறிய மீன்களை தனது அலகால் கவ்விக்கொண்டு பறக்கும் இயல்புடையன. கடல் கிளிகள் தங்கள் பிரதான உணவான மீன்களைப் பிடிக்க கடலுக்குள் டைவ் செய்து முப்பது மீட்டர் முதல் அறுபது மீட்டர் ஆழம் வரை செல்லுகின்றன.

இதையும் படியுங்கள்:
Party Palate!
Sea parrots that can catch ten fish at the same time!

இவற்றால் நீருக்குள் சுமார் ஒரு நிமிடம் வரை இருக்க முடியும். நீருக்கடியில் கடல் கிளியானது அதன் இறக்கைகளைப் பயன்படுத்தி நீந்தவும் செய்கின்றன. கடலுக்குள் நீந்தும்போது தங்கள் பெரிய ஆரஞ்சு நிறக்கால்களை திசைதிருப்ப சுக்கான்போல பயன்படுத்துகிறது.

கடல் கிளிகள் பொதுவாக 10 அங்குல உயரமும் ஐநூறு கிராம் எடையும் உடையவை. கடல் கிளியானது ஒரு நிமிடத்திற்கு அதன் இறக்கைகளை 400 முறை அசைத்து மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப் பறக்கும் ஆற்றலுடையவை. இவை பெரும்பாலும் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com