சிறுகதை - ஆணவம் கூடாது!

மாவீரர் அலெக்ஸாண்டர்...
மாவீரர் அலெக்ஸாண்டர்...

மாவீரர் அலெக்ஸாண்டர் உலகப் புகழ் பெற்றவர் அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு இது.

அலெக்ஸாண்டரின் நண்பர்கள் ஒரு தடவை இந்தியாவுக்கு சென்று திரும்பி வரும்போது அங்குள்ள ஒரு துறவியைக் கூட்டி வர வேண்டும் என கேட்டதற்கு இணங்க சரி என்றார்.

இந்தியா வந்த பின் அதை நினைவில் வைத்து ஒரு கிராமத்தின் நதிக்கரை ஓரமாக துறவி இருப்பதை கிராம மக்கள் கூறினர்.

"அவர்களிடம்  அந்த துறவியை என்னிடம் அழைத்து வாருங்கள்." என்றார். உடனே கிராம மக்கள் சிரித்தனர்.

என்ன வென்று விசாரித்தபோது  அவர்கள் "முற்றும் துறந்த  துறவிகள் கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் வர மாட்டார்கள்" என்று கூறினர்.

இதைக் கேட்டு  கோபமடைந்த அலெக்ஸாண்டர் , தன் உடைவாளை உருவிக் கொண்டு அத்துறவியைக் காண புறப்பட்டார்.

ஆழ்ந்த தியானத்தில் இருந்த துறவியிடம்  அலெக்ஸாண்டர், அவரிடம் "நான் தான் உலகம் போற்றும் மாவீரன் அலெக்ஸாண்டர், எனக்கு மரியாதை தர வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா?"

துறவி மெதுவாக கண்களை திறந்து அலெக்ஸாண்டரை பார்த்து "பெரிய மனிதர்கள்  எவருமே தங்கள் பெரிய மனிதத் தன்மையை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்கள் சிறியவர்கள் என்பதான அடையாளம்" என்றார்

அலெக்ஸாண்டர் கோபம்  கொண்டு, துறவியை தன் பின்னால் வரும்படி ஆணையிட்டார். துறவி கோபப்படாமல் 'யாருக்கு நீ ஆணையிடுகிறாய்? எங்களைப் போன்ற துறவிகள் எவருடைய  உத்தரவுக்கும் கட்டுப்படமாட்டோம். இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம், இறைவனைத் தவிர யாருக்குமே எங்களுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை" என்றார்.

இதையும் படியுங்கள்:
நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!
மாவீரர் அலெக்ஸாண்டர்...

உடனே அலெக்ஸாண்டர் கோபத்துடன் துறவியிடம் 'நீ என்னுடன் வர மறுத்தால் உன் தலையை வெட்டி சாய்ப்பேன்' என்று கூற...

உடனே துறவி " முட்டாளே, நான் என்ற ஆணவத்துடன் நீ ஆடுகிறாய். நான் எனும் ஆணவமே உன்னை அழிக்கும். எனவே அதை விட்டு விடு என் போன்ற துறவிகள் எதற்குமே அஞ்ச மாட்டார்கள்.

அதனால்தான் "ஆண்டிக்கு அரசனும் துரும்பு" என்றார்கள்.

அதனால் "நான்" என்று ஆணவத்தை விட்டு ஆகவேண்டிய நல்ல செயல்களைப் பார்" என்றார் துறவி.

உடனே அலெக்சாண்டர்  தவறை உணர்ந்து ஆணவம் நீங்கி, தன் வாளை அந்த துறவியின் பாதங்களில் வைத்து வணங்கி ஆசி பெற்று சென்றான்.

மனிதனுக்கு நான் என்ற ஆணவம் கூடாது. அது அவனையே அழித்து விடும். ஆணவத்தை விட்டு நல்ல வழியில் நடக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com