சிறுவர் சிறுகதை: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

This cloth will save my son!
children storyImage credit - youtube.com
Published on

கிருஷ்ண தேவராயருக்கு அரபு நாட்டு அரசர் பரிசாக ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்து வளர்த்தார்.

சிறிது காலத்தில் அந்த செடியில் நிறைய ரோஜா பூக்கள் பூத்தன.

அப்போது அங்கு வந்த தெனாலிராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க பூக்களை பறித்தான். பூக்களை பறிக்கும்

போது அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை பிடித்து அரசர் கிருஷ்ணர் தேவராயரிடம், அழைத்துச்செல்லும்போது தன் மகனை அழைத்துச் செல்வதை பார்த்து காவலர்களிடம், என் மகனை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டார்.

அவர்களோ! உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடியபோது நாங்கள் பிடித்துவிட்டோம் இப்போது அவனை மன்னரிடம் அழைத்துச் செல்கிறோம். அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார் என்று அவன் கைகளை காண்பிக்க செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறிது நேரம் யோசித்து, தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அவன் மேல் போர்த்திவிட்டார்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும், என்று கூறிவிட்டு பின்னால் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தெனாலியின் மகன் தந்தை, கூறியதை கேட்டு யோசிக்க தொடங்கினான். உடனே மூடிய துண்டுக்குள் ஒவ்வொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு மூடி இருந்ததால், அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் முன்னால் அழைத்துச் சென்று நிப்பாட்டினர். தெனாலியும் உடன் சென்றார்.

காவலர்கள் மன்னரைப் பார்த்து, அரசே! தெனாலிராமனின் மகன். இவன் நம் தோட்டத்தில் உள்ள ரோஜா பூக்களை திருடியபோது, அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: உங்கள் பலம் என்ன? உங்கள் திறமை என்ன? உணருங்கள் குட்டீஸ்! இந்த கதையை படியுங்கள்!
This cloth will save my son!

அரசர் காவலர்களை பார்த்து, திருடிய பூக்கள் எங்கே? என்று கேட்டார்.

உடனே காவலர்கள், அரசரைப் பார்த்து "பூக்கள் அனைத்தும் இவன் கைகளில்தான் அரசே உள்ளது" என்று கூறினர்.

அரசர் தெனாலிராமனின் மகனைப் பார்த்து, "உன் கைகளை காட்டு "என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலி மகனைப் பார்த்து, நீ பறித்த பூக்கள் எங்கே? என்று கேட்டார். அவனும் மன்னரைப் பார்த்து நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை. என் தந்தையை அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள் என்று கூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களை திட்டி அனுப்பி விட்டார். தெனாலியும், அவன் மகனும், எப்படியோ தப்பித்தோம்! என்று சிரித்துக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com