குட்டிக்கதை - அந்த மந்திரிக்கு அப்படி என்ன தகுதி?

kajini mohammed...
kajini mohammed...image credit - ta.wikipedia.org
Published on

ஜினி முகம்மது தனது முதன்  மந்திரியாக ஒரு கருப்பின அடிமையான ஆயாஸ் என்பவரை நியமித்திருந்தார். இது குறித்து மற்ற அரசவை அங்கத்தினர்களுக்கு கடுப்பு. ஒரு நாள் ஆயாஸ் இல்லாத சமயம், "எங்களை யெல்லாம் தவிர்த்து ஒரு கருப்பினஅடிமையை ஏன் உங்கள் முதன் மந்திரியாக நியமித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

கஜினி "அதற்கான காரணத்தை சொல்கிறேன். அதற்கு முன் உங்களில் ஒருவர் எனக்காக ஒரு காரியத்தை செய்ய வேண்டும்," என்றவர். ஒருவரைப் பார்த்து, "நமது நகர வாயிலுக்கு சென்று அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்து வாரும்." என்றார்.

அப்படியே அவர் பார்த்து விட்டு வந்து "அரசே, அங்கே சில நாடோடிகள் முகாம் போட்டிருக்கிறார்கள், " என்றார். "அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? " என்பது அரசரின் கேள்வி. பதில் சொல்ல முடியவில்லை. "அரசே, நீங்கள் அங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து வர  என்று மட்டும்தானே சொன்னீர்கள்", என்றார்,

அரசர் இன்னொருவரை அனுப்பி அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என பார்த்து விட்டு வரச் சொன்னார். அவர் திரும்பி வந்து " அரசே அவர்கள் பலாக் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள்." என்றார்.

"சரி, அவர்கள் இங்கிருந்து எப்போது கிளம்புகிறார்கள்?" தாங்கள் அதைப் பற்றி விசாரிக்க சொல்லவில்லையே? " என்றார் அந்த அறிவாளி.

ஒவ்வொரு மந்திரியாக சோதித்த பிறகு, கஜினி தனது முதன் மந்திரியை அழைத்து வரச்சொய்தார்.

"ஆயாஸ் நமது வாயில் வரை சென்று அங்கே என்ன இருக்கிறது என பார்த்து வா", என்றார்.

ஆயாஸ் போய்விட்டு ஒருமணி நேரம் கழித்து வந்து, "ஒரு நாடோடி கும்பல் வந்துள்ளது அரசே" என்றார்.

"எங்கேயிருந்து வந்திருக்கிறது? "பலாக் நாட்டிலிருந்து அரசே"

"எங்கே போகிறார்கள்? "" காபூலிருந்து ரதாகாஹானுக்கு".

"மொத்தம் எத்தனை பேர்? " "114 பேர்". " எத்தனை ஆண்கள்? "" 49 ஆண்கள்

இதையும் படியுங்கள்:
செத்துவிட்டதுபோல் நடிக்கும் ‘கோட்டி’ – அது என்ன?
kajini mohammed...

"பெண்களும், குழந்தைகளும் எத்தனை எத்தனை? "

"43 பெண்கள், 22 குழந்தைகள்"

"அவர்களது தொழில்?"  "கத்திகளும் வாள்களையும்  தீட்டுதல்".

" அவர்களிடம் எத்தனை மிருகங்கள் உள்ளன? ".

" 5 ஒட்டகங்கள், 8 குதிரைகள், 14 பசுக்கள், 17 ஆடுகள் "

"ரொம்ப நல்லது, ஆயாஸ் நீ போகலாம்"

ஆயாஸ் போனவுடன் தனது அவை உறுப்பினர்களை நோக்கிக் கூறினார். "நான் ஏதனால் ஆயாஸ்யை எனது முதன் மந்திரியாக நியமித்துள்ளேன் என்பதன் காரணம் உங்களுக்கு இப்போது விளங்கியிருக்கும். நான் சொல்வதை விட அதிகமாக அவர் செய்கிறார்".

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com