படிப்பினை தரும் குட்டிக் கதைகள்...!

Sivaji...
Sivaji...Image credit - tamilandvedas.com
Published on

பரிசு!

ராட்டிய மாவீரர் சிவாஜி, இராமதாசர் மீது ஆழ்ந்த பக்தியும், அளவு கடந்த அன்பும்  வைத்திருந்தார்.

ஒரு சமயம், அவருக்கு ஏராளமான பொன்னும், மணியும் இதர பொருள்களும் காணிக்கையாகக் கொடுத்து அனுப்பினார்.

இவைகளை பெற்றதும் இராமதாசர் கையளவு மண், சில கூழாங்கற்கள், கொஞ்சம் குதிரை சாணம் ஆகியவற்றை கொடுத்து அனுப்பினார்.

இராமதாசர் அனுப்பிய பரிசுப் பொருட்களை பார்த்ததும் சிவாஜியின் அன்னை வெகுண்டார்.

"உயர் குடியில் பிறந்த ஒரு ராஜகுமாரனுக்குக் கொடுக்கக் கூடிய பொருட்களா இவை? என்று கோபத்தில் கேட்டார்.

உடனே மாவீரர் சிவாஜி மிகுந்த அடக்கத்துடன் ,  அம்மா, இவையெல்லாம் குரு தேவரின் தீர்க்க தரிசனம் மிக்க குறிப்புப் பொருட்கள் அம்மா! மொகலாயர்களின் ஆதிக்கத்திலிருந்து இந்த நாடு முழுவதையும் நான் வெல்வேன் என்பதை இந்த மண் குறிக்கிறது.

எனது நாட்டை வலிமைமிக்க மாபெரும் கோட்டைகளால் பாதுகாப்பேன் என்பதை இந்தக் கூழாங்கற்கள் காட்டுகின்றன.

எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய பெரிய குதிரைப்படையை  அமைப்பேன் என்பதை இச்சாணம் உணர்த்துகிறது "என்று கூறினார் சிவாஜி.

தியாகியா துரோகியா?...

லக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய மொகலாய சக்கரவர்த்தி ஷாஜகானை  அவரது மகன் அவுரங்கசீப் 1658 ம் ஆண்டு சிறை வைத்துவிட்டு தானே சக்கரவர்த்தி என முடிசூட்டிக் கொண்டான்.

முக்காராம் கான் என்பவர் ஷாஷகானுடைய நம்பிக்கைக்குரிய வைத்தியர். ஒரு நாள் அவுரங்கசீப் வைத்தியர் முக்காராம் கானைக்  கூப்பிட்டனுப்பி வழக்கமாக மருந்து கொடுப்பதுபோல் விஷத்தை கொடுத்துத் தன் தந்தையை கொன்று விடுமாறு உத்தரவிட்டான்.

இதையும் படியுங்கள்:
விடா முயற்சியே வெற்றியை விருட்சமாக்கும்!
Sivaji...

வைத்தியருக்கும் ஒரே திகைப்பு! நம்பிக்கை வைத்திருக்கும் நோயாளியை கொல்வது என்பது வைத்திய தொழிலுக்கு இழுக்கு, அதே வேளையில் சக்கரவர்த்தியின் ஆணையை மீறினால் தலை போய்விடும்.

இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக வைத்தியர் ஒரு உபாயத்தை கடைபிடித்தார். சக்கரவர்த்தியின் ஆணைப்படி முக்காராம் கான் விஷத்தை கோப்பையில் கலந்தான். ஒரு சொட்டு உள்ளே போனாலே உயிரை குடித்துவிடும் விஷம். அது. !

அவுரங்கசீப் தன் தந்தை மருந்து என நினைத்துக் கொண்டு தனது ஆஸ்தான வைத்தியர் கையால் சாகப்போவதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தான்.

ஆனால், வைத்தியன் முக்காராம் கான் அந்த விஷத்தை ஷாஷகானுக்கு கொடுக்கவில்லை, தானே சாப்பிட்டு உயிர் துறந்தான்.!

இதனால் அதிர்ச்சி அடைந்த அவுரங்கசீப் பின்னர் தனது தந்தையை கொலை செய்யும் முயற்சியை கைவிட்டான். அதற்கு பிறகு ஷாஜகான் எட்டாண்டுகள் சிறையில் இருந்து இயற்கையாக இறந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com