உலகில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று பூனை, இதனை தெய்வமாக பல நாடுகளில் வணங்கி வருகிறார்கள். மனிதனை தவிர உலகில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட விலங்கு எது என்றால் அது பூனைதான். உலகில் ஆங்காங்கே பல பூனைகள் நம்மை ஆச்சரியமூட்டிவருகின்றன. அவற்றில் சில...
விமான நிலைய ஊழியரான பூனை
உலகின் பிசியான விமான நிலையங்களில் ஒன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் ,அன்மையில இந்நிலைய நிர்வாகம் "டியூக் " என்ற 14 வயது கருப்பு மற்றும் வெள்ளை நிற பூனை ஒன்றை வேலைக்கு சேர்த்து உள்ளது. இதற்கான அறிவிப்பை தங்களது வெப்சைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
"வாக் பிரிகேட்" என்ற ஊழியரணி பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள இந்த பூனையின் முழுப்பெயர் "டியூக் எலிங்டன் மாரீஸ்" பிரத்யேக பயிற்சியளிக்கப்பட்ட இந்த பூனையின் வேலை. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுடன் விளையாடி அவர்களின் பயண பதட்டத்தை குறைப்பது தான் .
"வாக் பிரிகேட்" என்ற ஊழியரணி 2013 ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்ற செல்லப் பிராணிகள் சேர்க்கப்படும் அவைகள் விமான நிலையம் வரும் பயணிகளை மகிழ்விக்கும். கலிபோர்னியா விமான நிலையத்தில் அறிமுகப்படுத்திய இந்த ஊழியரணியில் ஒரு நாய்முதன்முதலாக அறிமுகமானது தற்போது முதன் முதலாக பூனை சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் பேரால் ரசிக்கப்படும் பூனை
உலகிலேயே அதிக மக்களால் விரும்பப்படும் பூனை இந்த நாலா எனும் பூனை தான். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள எல்லிஸ் என்பவருக்கு சொந்தமான இந்த சயாமி வகை நீல கண்களையும் அழகிய முகம் கொண்ட பூனையை உலகில் இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர் கிறார்கள். இது ஒரு கின்னஸ் சாதனை 2019ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்ந்தது. 8வயதான இந்த பூனையின் மதிப்பு 100 மில்லியன் டாலர்கள்.
இதனையடுத்து வட கரோலினா பகுதியில் இருக்கும் வீனஸ் என்ற இரு முகம் கொண்ட பூனை உள்ளது. இதன் ஒரு புறம் வெள்ளை நிறமும் மறுபக்கத்தில் இளம் சிகப்பு நிறமும் ,வலது கண் பச்சை நிறத்திலும், இடது கண் நீலநிறத்திலும் இருக்கும் பூனையை இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.
பள்ளி மாணவரான பூனை
கலிபோர்னியாவிலுள்ள சான் ஜோஸ் லீலாண்டு எனும் பள்ளியில் "பூபா " என்ற பூனையை 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ல் ஒரு மாணவராக சேர்த்து சாதனை படைத்துள்ளனர். மரியன்தாஸ் என்பவர் இந்த பூனையை வீட்டில் வளர்த்துள்ளார். ஆனால் அந்த பூனை வீட்டில் இல்லாமல் லீலாண்டு பள்ளியே கதி என்று கிடந்தது.
காலையில் மாணவ மாணவிகள் கூடவே இருந்து பாடங்களை அமைதியாக கேட்டு விட்டு மாலையில் வீடு வந்து விடும். இதனை கண்ட பள்ளி நிர்வாகம் கடைசியில் அந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் படி அந்த பூனையை ஒரு மாணவராக சேர்த்துக்கொண்டது.
மேயராக 20 வருடம் இருந்த பூனை
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டால்கிட்னா என்ற சிறிய நகரத்தின் கெளரவ மேயராக ஒரு பூனை இருந்துள்ளது. அதுதான் "ஸ்டண்ட்" என்ற ஆரஞ்சு நிற பேபி பூனை. இது 1997 ஜூலை 18 முதல் 2017 ஜூலை 21 வரை மேயராக இருந்து அசத்தியது. மேயராக இருந்த போதே இறந்தது இந்த பூனை எனபது குறிப்பிடத்தக்கது.