பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய உயிரினங்களில் மின்மினி பூச்சியும் ஒன்று! சிறிய உருவமாய் இருந்து கொண்டு அதன் ஒளியால் கவரக்கூடிய மின்மினி பூச்சிகளை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
* மின்மினி பூச்சிகள் நாம் நினைப்பது போன்று பூச்சி இனத்தை சார்ந்தது அல்ல, அவை வண்டு இனத்தைச் சார்ந்தவை.
* மின்மினி பூச்சிகள் ஒளி வீச காரணம் அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள லூசிஃ பெரேஸ் எனும் என்சைமே காரணம்.
* மின்மினி பூச்சிகளின் உடலில் உள்ள வேதி ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றப்படுவதால் ஒளி வீசுகிறது.
* மின்மினி பூச்சிகள் தங்கள் இணையை ஈர்ப்பதற் காகவே ஒளியை பரப்புகின்றன.
* மின்மினி பூச்சிகளின் சிறப்பு என்னவென்றால் மின்மினி பூச்சிகள் இரையை பிடித்தவுடன் அதை அப்படியே சாப்பிடாது. இரையை முதலில் மயக்கம் அடைய செய்யும். இதற்காக அதன் முன் பகுதியில் பிரத்தியேகமாக ஒரு கொடுக்கு உள்ளது. மயக்கம் அடையச் செய்து இரையின் உடல் கூழ்மமாக மாறியவுடன் அதனை நீரை குடிப்பது போன்று உறிஞ்சி குடித்து விடும்.
* பொதுவாக மின்மினி பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. ட்ரக்கியோல்கள் எனப்படும் குழாய்கள் மூலமே அது ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும்.
* பெண் பூச்சிகளை காட்டிலும் ஆண் பூச்சிகளே அதிகமாக ஒளியை வெளியிடும்.
* மின்மினி பூச்சிகளால் வேகமாக பறக்க முடியாது.
* மின்மினி பூச்சிகளின் ஆயுட்காலம் 2 மாதங்கள்.
* மின்மினி பூச்சிகளைப் போன்றே உலகில் சில தாவரங்கள், சிலவகை காளான்கள், சில வகை மீன்கள் கூட இயற்கையாகவே ஒளியை உமிழும் தன்மையை பெற்று இருக்கின்றன.
* மின்மினி பூச்சிகளுக்காக மும்பைக்கு அருகில் உள்ள பந்தர்தாரா என்ற இடத்தில் கஜ்வா திருவிழா என்று ஒரு திருவிழாவே நடத்தப்படுகிறது.