மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற சில சிறந்த பழக்கங்கள்!

students...
students...Image credit - pixabay
Published on

ரோக்கியமான நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் மன ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நல்ல பழக்கவழக்கங்களை பழகிவிட்டால் அதுவே நம் தினசரி நடவடிக்கையாக ஆகிவிடும்.

படிப்பது:

தினமும் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது படிப்பது நல்லது. அது பாட சம்பந்தப்பட்டதாகவோ அல்லது பொது அறிவு சம்பந்தமாகவோ இருக்கலாம். தினமும் படிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி / தியானம்:

மனதை கட்டுப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் தியானம் மற்றும் உடற்பயிற்சி அவசியம். இவை இரண்டும் உடல் நலனை மட்டுமின்றி மனநலத்தையும் காக்கும் சிறந்த பயிற்சிகள்.

பொழுதுபோக்கு:

பொழுதுபோக்குக்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். படிப்பு சுமையின்போது மனதை லேசாக்க விருப்பமானவற்றில் சிறிது நேரம் பொழுதைப் போக்கலாம். அது இசைக்கருவியை வாசிப்பதாகவும் இருக்கலாம் அல்லது நம் மனதிற்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருகிறதோ அந்த விஷயத்தில் தினம் அரைமணி நேரமாவது செலவிடலாம்.

 தூக்கம்:

படிக்கும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஏழு எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். நேரத்துடன் படுக்கச் சென்று விடிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல தூக்கம் தான் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

 ஆரோக்கியமான உணவு:

ஜங்க் ஃபுட்களை எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். புரதம், கால்சியம், விட்டமின்கள் நிறைந்த சமச்சீரான உணவு மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். அதிக காரம், மசாலாக்கள் நிறைந்த உணவை தவிர்த்து விடுவது நல்லது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டை வகைகள் உணவில் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுத்தம் சுகாதாரம்:

மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்க சுத்தமும் சுகாதாரமும் வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது, சாப்பிடும் முன் கை கால்களை கழுவுவது போன்ற சுத்த நடவடிக்கைகளில் ஈடுபட மனமும் உடலும் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபடும்.

நேர்மறை எண்ணங்கள்:

எதிர்ப்படும் சவால்களை சமாளிக்க மாணவர்கள் நேர்மறையான மனநிலை கொண்டிருப்பது அவசியம். நேர்மறையான அணுகுமுறை தான் மாணவர்கள் சவால்களைக் கடந்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாக திறம்பட செயல்பட உதவும். 

நேர மேலாண்மை:

ஒரு நல்ல மாணவர் தங்களுடைய நேரத்தை திறம்பட நிர்வாகிக்க தெரிந்திருக்க வேண்டும். நேர மேலாண்மை என்பது வெற்றிக்கான முக்கியமான பண்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
students...

இலக்கை நோக்கி:

தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு கவனச்சிதறல் ஏதும் இன்றி அதை அடைவதற்காக செயல்பட வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளை அடைய தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் படிக்கும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், மனநிலையையும் உடல் நிலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். படிப்பில் கவனம் செலுத்தி சாதிக்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com