குட்டீஸ்களா... பள்ளி விடுமுறை துவங்கியாச்சு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது தெரியுமா?

summer vacation safety tips for students
summer vacation safety tips for studentsImg credit: AI Image
Updated on

மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்க கூடாது. 

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்துங்கள்.

வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். 

விடுமுறை நாட்களில்  சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் அதை சரியாக கையாள வேண்டும்.

தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். 

தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றை பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

மாணவர்கள் மூளை வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீரான உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய  உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

கோடை காலத்திற்கேற்ற பழவகைகளை சாப்பிட வேண்டும். 

வீட்டின் அருகே உள்ள பொது நூலகங்களுக்கு சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க வேண்டும். காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறுவர் கதைகள், நீதிக் கதைகள் படிக்க வேண்டும்.

இசை, நடனம், ஓவியம், தையல் தைப்பது, கம்யூட்டர், டைப்ரைட்டிங் போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் .

வீட்டில் தோட்டம் இருந்தால் காய், பூ பறிப்பது, தண்ணீர் ஊற்றுவது, களை எடுப்பது என சின்ன சின்ன வேலைகளை செய்யலாம். 

பூஜை அறையை சுத்தம் செய்வது, காலையில் குளித்து கோவில் போய் விட்டு வருவது, பூஜை அறையில் சில துதிகளை சொல்வது என பழக வேண்டும்.

தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களை மதிப்பது வீட்டின் அருகில் உள்ள பெரியவர்களிடம் பேசி அவர்கள் தரும் நல்ல அறிவுரைகளை கேட்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆபிரகாம் லிங்கன் ஏன் தாடி வளர்த்தார்? பின்னணியில் இருக்கும் ஒரு குட்டிப் பெண்!
summer vacation safety tips for students

கோடைக்கு இதம் தரும் நுங்கு, இளநீர், தர்பூசணி போன்ற இயற்கை உணவு வகைகள் சாப்பிட பழகுங்கள். ஜங் புஃட் வேண்டவே வேண்டாம்.

மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கால்சியம் கிடைக்க பால் சாப்பிடுங்கள். 

கீரை வகைகளை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். 

காலை, மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் ஓடியாடி விளையாடுங்கள். நன்றாக நடை பயிற்சி செய்யுங்கள். 

கோடை பள்ளி விடுமுறையை இவ்வாறெல்லாம் கடை பிடித்து சந்தோஷமாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் குட்டீஸ்களா செய்வீர்களா..?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com