சிறுவர் சிறுகதை: பொறுமை பெருமை தரும்!

A Heartwarming Mother-Son
Tamil Children's short story | Mother - SonAI Image
Published on

“ராஜூ, எழுந்திரு! குளிச்சுட்டு கிளம்ப சரியா இருக்கும்”

அம்மாவின் குரல் கேட்டது. ஆனால், ராஜூ எழுந்திருக்கவில்லை. அம்மா அருகில் வந்து, ராஜுவை மெல்லத் தட்டி எழுப்பினாள்.

“எழுந்திரு கண்ணா, அப்புறம் பள்ளிப் பேருந்து போயிடும். ம்ம்... சீக்கிரம்!”

“போம்மா, போ!” என்று கோபமாகக் கத்தினான் ராஜூ.

“ம்ஹூம்... பல் தேய்த்துக் குளிக்க வேண்டும், எழுந்திரு,” என அவனைப் படுக்கையில் இருந்து மெல்லத் தூக்கினாள் அம்மா.

கோபமாகவே எழுந்தான் ராஜூ. கால்களைத் தரையில் வேகமாகத் தேய்த்துச் சத்தம் வரும்படி குளியலறைக்குச் சென்றான். குளியலறையில் தன் கோபத்தை வாளி, சோப்பு, டப்பா மற்றும் தண்ணீர்க்குழாய் மீது காட்டினான்.

“ராஜூ, பொறுமை... பொறுமை. எதுக்கு இவ்வளவு கோபம்? எதுக்கு ஆத்திரம்?” என அம்மா மீண்டும் சொன்னாள்.

இப்போதெல்லாம் ராஜூ ஒவ்வொரு விஷயத்துக்கும் அநாவசியமாகக் கோபப்படுவது வழக்கமாகிவிட்டது.

காலை உணவுத் தட்டை எடுத்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தான் ராஜூ.

“ராஜூ, சீக்கிரம் சாப்பிட வேண்டும். தொலைக்காட்சி பார்த்தால் நேரமாகிவிடும். டி.வி. போடாதே,” என்றாள் அம்மா.

உடனே ராஜூ ரிமோட்டைத் தூக்கி எறிந்தான். அதிலிருந்த பட்டன்களில் ஒன்று தெறித்து விழுந்தது.

“ராஜூ, சின்ன விஷயங்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் ஆத்திரமும் கொள்கிறாய்? இது ரொம்பத் தப்பு!” அம்மாவின் குரலில் கண்டிப்பும் கடுமையும் தெரிந்தன.

ராஜூ அமைதி காத்தான். ‘ஒருவேளை கைபேசியை இவ்வாறு தூக்கி எறிந்திருந்தால் அது பழுதாகி இருக்கும், அம்மா, அப்பா மிகவும் கோபித்திருப்பார்கள்’ என அவன் நினைத்தான்.

“இப்போ இந்த ரிமோட் இல்லாம தொலைக்காட்சி பார்க்க முடியாது. இது நமக்கு வீண் செலவுதான்,” என்றாள் அம்மா.

ராஜூ மௌனமாகத் தன் சீருடையை அணிந்தான்.

“ராஜூ, பொறுமையா இருக்கணும். உன் கோபத்தால நீ ஒரு பொருளை உடைச்சா, அதைத் திருப்பி வாங்கிடலாம். ஆனா, மத்தவங்க மனசை உடைச்சா, அந்த உறவை ஒட்ட வைக்க முடியுமா?” என்று கேட்ட அம்மா, அவனருகே வந்து தலையைக் கோதிவிட்டாள்.

“அம்மா, நான் கோபப்படக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா, எப்படியோ கோபம் வந்திடுது,” என்றான் ராஜூ வருத்தத்துடன்.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் விகடகதை: பால் குடிக்காத பூனை!
A Heartwarming Mother-Son

“கோபத்தை வெல்ல உனக்கு ஒரு மந்திரம் சொல்லவா? பொறுமை! பொறுமை! பொறுமை பெருமை தரும்! இந்த மந்திரத்தைக் கோபம் வரும்போது சொல்லிப் பாரு,” என்றாள் அம்மா.

மாலையில் ராஜூ மிக மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

“அம்மா, இன்னைக்கு நான் எதுக்காகவும் யார்கிட்டயும் கோபப்படல அம்மா!”

“ஆஹா! அருமை, அருமை!”

“என் நண்பர்கள் கூட என்னைப் பாராட்டினாங்க அம்மா!” என்று சொல்லி அம்மாவைக் கட்டிக்கொண்டான் ராஜூ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com